Watch Video: கரைபுரண்டோடிய ஆறு.. உயிர் பணயம் வைத்து இருவரை காப்பாற்றிய கெத்து போலீஸ்! வைரல் வீடியோ!
மகாராஷ்டிராவில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவரை, 2 காவலர்கள் உயிரை பணயம் வைத்து காப்பாற்றியுள்ளனர்
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நபர்
மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேவில் உள்ள பகுல் உதயன் பகுதியில், மழை காரணமாக, அங்குள்ள ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது அந்த ஆற்றில் ஒருவர் வெள்ள நீரில் மாட்டிக் கொண்டார்.
அப்போது இரண்டு காவல்துறையினர் தனது உயிரையும் பொருட்படுத்தாது, வெள்ள நீரில் இறங்கி , அந்த நபரை காப்பாற்றினர்.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
பாராட்டிய எம்.பி:
அந்த வீடியோவை தற்போது மகாராஷ்டிரா தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், நாடாளுமன்ற எம்.பி-யுமான சுப்ரியா சுலே இந்த வீடியோவை பகிர்ந்து காவல்துறையினருக்கு பாராட்டுக்களையும், மகாராஷ்டிரா காவல்துறையினரை நினைத்து பெருமைப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் பலரும், இந்த வீடியோவை பகிர்ந்து, மகாராஷ்டிரா காவல்துறைக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
Dattawadi,Pune Police Constable Saddam Shaikh and Ajit Pokare rescued a man who was being swept away in a stream near Bagul Udyan in Shivane.Risking their own lives,the courage shown by the two is commendable!We are proud of the Maharashtra Police! @PuneCityPolice @DGPMaharashtra https://t.co/4iLWbOppDr
— Supriya Sule (@supriya_sule) July 9, 2022
View this post on Instagram