மேலும் அறிய

மதுரை விமான நிலைய விவகாரம்: கொள்கை முடிவு வேண்டும் - சு.வெங்கடேசன் !

கொள்கை ரீதியாக முடிவெடுக்க வேண்டிய மத்திய அரசு வெறும் அறிவுரை கூறுவதும், கோரிக்கை வைப்பதும் கண்துடைப்பு நடவடிக்கையாகும். - மதுரை எம்.பி குற்றச்சாட்டு.

மதுரை சர்வதேச விமான நிலையம் கொள்கை ரீதியாக முடிவெடுக்க வேண்டிய ஒன்றிய அரசு வெறும் அறிவுரை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.- மதுரை எம்.பி

சு.வெங்கடேசன் எம்பி தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.

மதுரை விமான நிலையத்திலிருந்து கூடுதல் சர்வதேச விமானங்களை இயக்குவது மற்றும் ஆசிய நாடுகளுக்கான (ASEAN) விமான சேவை ஒப்பந்தத்தில் மதுரையைச் சேர்ப்பது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்குப் பதில் அளித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு விளக்கமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். கடிதத்தின் முக்கிய விவரங்கள்: கடந்த 2025 நவம்பர் 21 அன்று, மத்திய சிவில் விமானபோக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுஅவர்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதில், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 11 ஆசியான்(ASEAN) நாடுகளுடன் கையெழுத்திடப்பட்டுள்ள இருதரப்புவிமான சேவை ஒப்பந்தத்தில் உள்ள 18 சுற்றுலாநகரங்களின் (Point of Call - POC) பட்டியலில் மதுரைவிமான நிலையத்தையும் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், ஆசியான் நாடுகளைச் சேர்ந்த சர்வதேச விமான நிறுவனங்கள் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து மதுரைக்கு நேரடியாக விமானங்களை இயக்க வழிவகுக்கும். தற்போது தமிழகத்தில் திருச்சிராப்பள்ளி விமான நிலையம் மட்டுமே இந்த 18 சுற்றுலா நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக, ஏர் ஆசியா, பாட்டிக் ஏர், சில்க் ஏர்போன்ற நிறுவனங்கள் 'திறந்தவெளி வானக் கொள்கையின்' (Open Skies Policy) கீழ் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றிஅங்கு விமானங்களை இயக்கி வருகின்றன.

மத்திய அரசின் நிலைப்பாடு மற்றும் முரண்பாடுகள்: சர்வதேச விமான நிறுவனங்கள் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மதுரைக்கு விமானங்களை இயக்க அனுமதி கோரிவருகின்றன. ஏப்ரல்-2013-ல், சிங்கப்பூர் விமானநிறுவனங்கள் மதுரைக்கு விமானங்களை இயக்க ஏதுவாக, மதுரையையும் புனேவையும் கூடுதல் விமான நிலையங்களாக (Points of Call) அங்கீகரிக்கக்கோரி சிங்கப்பூர் அரசு விடுத்த அதிகாரப்பூர்வ கோரிக்கையை இந்திய அரசு நிராகரித்தது. இந்திய அரசு இதனை 'கொள்கை முடிவு' எனக் கூறிதொடர்ந்து மறுத்து வருகிறது.

வந்த வகையில் நியாயம்

சர்வதேச விமானங்களை இயக்கத் தொழில்நுட்ப ரீதியாகத் தகுதியற்ற கஜுராஹோ போன்ற உள்நாட்டு விமானநிலையங்களும், கடந்த 15 ஆண்டுகளாக ஆசியான் நிறுவனங்களால் ஒருமுறை கூட பயன்படுத்தப்படாத (Zero-Utilisation) அவுரங்காபாத், போர்ட் பிளேயர் போன்ற விமானநிலையங்களும் இந்தச் சிறப்புப் பட்டியலில் நீடிக்கின்றன. ஆனால், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுடன் ஆழமான கலாச்சார மற்றும் வணிகத் தொடர்புகளைக்கொண்ட, அதிக தேவையுள்ள மதுரை விமான நிலையம் இந்தப் பட்டியலில் புறக்கணிக்கப்படுவது ஏன்? இதற்குப் பதிலளித்துள்ள அமைச்சர் கிஞ்சராபு நாயுடு, தற்போதைய நிலையே தொடரும் என்றும், இந்தக் கொள்கை ஒருமுறை எடுக்கப்பட்ட முடிவு என்பதால் மதுரையைச் சேர்ப்பதற்காக மாற்றியமைக்க முடியாதுஎன்றும் தெரிவித்துள்ளார். இது எந்த வகையிலும் நியதியல்ல.

கண்துடைப்பு

வளர்ந்து வரும் ஒரு நகரத்தின் தேவையை கணக்கில் கொள்ளாமல் மாற்றவே முடியாத கொள்கையை கொண்டதாக அரசு பதிலளித்துக் கொண்டிருப்பது பழமைவாத அணுகுமுறை மற்றும் அரசியல் காரணங்களை உள்ளடக்கியதாகும். சர்வதேச விமானச் சேவைகளைத் தொடங்குவது என்பது முழுக்க முழுக்க விமான நிறுவனங்களின் வணிக ரீதியான முடிவாகும். பயணிகளின் எண்ணிக்கை, விமானங்களின் இருப்பு மற்றும் பொருளாதார ரீதியான லாபம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டே நிறுவனங்கள் இதனைத் தீர்மானிக்கின்றன. இதில் மத்திய அரசு தலையிடுவதில்லை என்று அமைச்சர் கூறியுள்ளார். “இருப்பினும், மதுரையின் முக்கியத்துவத்தைக் கருதி, அங்கிருந்து சர்வதேச விமானச் சேவைகளை விரிவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அனைத்து இந்திய விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கும் (Indian Carriers) ஒன்றிய அரசு முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளதாக” அமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். கொள்கை ரீதியாக முடிவெடுக்க வேண்டிய ஒன்றிய அரசு வெறும் அறிவுரை கூறுவதும், கோரிக்கை வைப்பதும் கண்துடைப்பு நடவடிக்கையாகும்.

தலைப்பு செய்திகள்

Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Embed widget