Rescue Operation Srishti : 3 நாட்களாக நீடிக்கும் மீட்பு பணிகள்.. இறங்கிய ராணுவம்.. இரண்டரை வயது குழந்தை ஸ்ருஷ்டியின் நிலைமை?
சுரங்கப்பாதை அமைத்து குழந்தையை மீட்கலாம் என்ற நம்பிக்கையில், ஆழ்துளை கிணற்றை ஒட்டிய நிலத்தில் பள்ளம் தோண்ட 10 க்கு மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் ஈடுபட்டு வருகிறது.
மத்திய பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் 300 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை ஸ்ருஷ்டியை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்புப் பணியில் தற்போது ராணுவமும் இணைந்துள்ளது.
கடந்த செவ்வாய் கிழமை மதியம் 1.30 மணியளவில் முங்காவகி கிராமத்தில் உள்ள தனது வீட்டின் அருகே சிருஷ்டி குஷ்வாஹா என்ற இரண்டரை வயது விளையாடி கொண்டிருந்தது. அப்போது, அருகிலிருந்த பண்ணையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் அந்த குழந்தை தவறி விழுந்தது.
குழந்தை தவறி விழுந்தபோது மாட்டு சாணம் பிசைந்து கொண்டிருந்த சிறுமியின் தாய் ராணி, “ என் குழந்தை என் அருகில்தான் இருந்தது. விளையாடி கொண்டிருந்த என் குழந்தை திடீரென ஆழ்துளை கிணற்றை நோக்கி ஓடி விழுந்து விட்டது. அங்கு ஆழ்துளை கிணறு இருப்பது எங்களுக்கு தெரியாது. அப்போது சிருஷ்டியின் தந்தை இல்லை.” என தெரிவித்தார்.
இதையடுத்து குழந்தையில் தாய் கிராம மக்களின் உதவியை நாடியுள்ளார். அது பயனளிக்காமல் போகவே, உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக மீட்பு பணியினரை அனுப்பி வைத்தனர்.
VIDEO | Borewell rescue robot team arrives as efforts to pull out the 2.5-year-old girl from the borewell in Madhya Pradesh's Sehore district are still underway. pic.twitter.com/G6lqFdFk7G
— Press Trust of India (@PTI_News) June 8, 2023
விரைந்து வந்த மீட்பு குழுவினர் முதலில் ஒரு கொக்கி பொறி முறை மூலம் குழந்தையை தூக்க முயற்சி செய்தனர். ஆனால், அது பெரிதாக கைகொடுக்கவில்லை. இதையடுத்து, சுரங்கப்பாதை அமைத்து குழந்தையை மீட்கலாம் என்ற நம்பிக்கையில், ஆழ்துளை கிணற்றை ஒட்டிய நிலத்தில் பள்ளம் தோண்ட 10 க்கு மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் ஈடுபட்டு வருகிறது.
முன்னதாக, குழந்தையில் நிலைமை என்ன என்பது குறித்து அறிய, மீட்புக்குழுவினர் ஆழ்துளை கிணற்றில் கேமரா கேபிளை அனுப்பி வைத்தனர். போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் குழந்தையை காணமுடியவில்லை என தெரிவித்தனர்.
#WATCH | Operation continues in Mungaoli village of Sehore district to rescue a 2.5-year-old girl who fell into a borewell while playing in the field. #MadhyaPradesh pic.twitter.com/gZd6TPwKDx
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) June 7, 2023
முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று நிலைமையை ஆய்வு செய்து, மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ ராணுவத்தை வர வைத்தார். இதுகுறித்து பேசிய அவர், “ சிருஷ்டி என்ற குழந்தை நேற்று முன்தினம் ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. தற்போது அவளை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது. முன்னதாக 40 அடி ஆழத்தில் இருந்த சிறுமியை மீட்க முயற்சித்தபோது, நிலத்தில் ஏற்பட்ட அதிர்வு காரணமாக 100 அடி கீழே சென்றார். ராணுவத்தை அழைத்துள்ளோம். மீட்புப் பணிகளில் ராணுவமும் இணைந்தால், குழந்தையை வேகமாக வெளியே எடுக்க முடியும் என்பது என் எண்ணம். சிறுமியை பாதுகாப்பாக மீட்டெடுக்க முயற்சி செய்து வருகிறோம். இதில் நாங்கள் வெற்றிபெற இறைவனை பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்தார்.
செஹோர் மாவட்ட ஆட்சியர் பொறுப்பு ஆஷிஷ் திவாரி பேசுகையில், “ நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். கடினமான பாறைகள் இருப்பதால் குழி தோண்டுவதில் கால தாமதம் ஏற்படுகிறது. நாங்கள் குழந்தையை காப்பாற்ற முயற்சிக்கிறோம். நாங்கள் குழந்தையிடம் பேச முயற்சித்தோம். பதிலளிக்கவில்லை, அந்த குழந்தை மயக்கத்தில் இருக்கிறது” என தெரிவித்தார்.