Viral Video: எங்கே போனது மனித நேயம்... மருத்துவனையில் முதியவருக்கு நேர்ந்த கொடுமை...வைரல் வீடியோ
Viral Video: மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் 77 வயது மதிக்கத்தக்க ஒருவரை இரண்டு ஆண்கள் இழுத்துச் செல்லும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை 77 வயது முதியவரை ஒரு மருத்துவர் இரக்கமின்றி தாக்கிய வீடியோ காட்சி இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஏப்ரல் 17 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தை, அருகில் இருந்தவர்கள் மொபைல் கேமராவில் படம் பிடித்தனர்.உதவ்லால் ஜோஷி தனது நோய்வாய்ப்பட்ட மனைவியை வயிற்று நரம்பு கோளாறு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். மற்றவர்களைப் போல சிகிச்சைகாக அவர்கள் வரிசையில் காத்திருந்ததாக அவர் கூறினார்.
நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பிறகு தனது முறை வந்தபோது,கூட்டத்தினரால் எரிச்சலடைந்த மருத்துவர், அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக தெரிகிறது கூறினார். முதியவர் ஜோஷி விளக்க முயன்றபோது, மருத்துவர் அவரை அறைந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், மருத்துவர் அவரை மருத்துவமனை வளாகத்திற்குள் உள்ள காவல் நிலையத்தை நோக்கி இழுத்துச் சென்றார்.
அந்த வீடியோவில், டாக்டர் மிஸ்ராவும், செஞ்சிலுவை சங்க ஊழியர் என அடையாளம் காணப்பட்ட மற்றொரு நபரும், ஜோஷியை வெளிநோயாளி பிரிவுக்கு வெளியே இழுத்துச் செல்வதைக் காணலாம். சமூக ஊடகங்களில் வைரலான இந்த வீடியோவில், மருத்துவர் எழுபது வயதானவரை அறைவதையும் காணலாம்.
देखिए डॉक्टर का "शैतानी रूप"
— MANOJ SHARMA LUCKNOW UP🇮🇳🇮🇳🇮🇳 (@ManojSh28986262) April 20, 2025
70 साल के बुजुर्ग के साथ पहले मारपीट फिर घसीट कर बाहर किया गया है !!
मध्यप्रदेश के छतरपुर में इन हालात को देखकर लगता है जिला में अब सिर्फ इलाज के लिए डॉक्टरों से संपर्क न करें बल्कि अगर किसी के साथ मारपीट या गुंडागर्दी करनी है तो जिला अस्पताल में जाओ… pic.twitter.com/bwvhHvxEi3
"மருத்துவர் என்னை உதைத்து காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்றார். அவர் என்னை அறைந்து என் கண்ணாடியை உடைத்தார். அவர் என் சீட்டையும் கிழித்து கொலை மிரட்டல் விடுத்தார். என் மனைவியும் தாக்கப்பட்டார்," என்று பாதிக்கப்பட்ட ஜோஷி செய்தியாளர்களிடம் கூறினார். பொதுமக்களின் புகார் மற்றும் காரணமாகவும் சம்பவம் தொடர்பான மறுக்க வீடியோ ஆதாரங்கள் இருந்ததால், மருத்துவர் சம்பவ இடத்தை விட்டு ஓடிவிட்டார்.





















