மேலும் அறிய

Lunar Eclipse 2024: 100 ஆண்டுகளுக்கு பின் நிகழும் சந்திர கிரகணம்.. இந்திய நேரப்படி எப்போது தோன்றும்?

Lunar Eclipse 2024: 100 ஆண்டுகளுக்கு பின் பங்குனி உத்திரம் அன்று சந்திர கிரகணம் நிகழ்வதால் இந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது. இன்று பங்குனி உத்திரம் மற்றும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படப்படுகிறது. 100 ஆண்டுகளுக்கு பின் பங்குனி உத்திரத்தன்று சந்திர கிரகணம் நிகழ்கிறது.

"சூரியனின் ஒளியால் ஏற்படும் ஒரு வான்பொருளின் (சூரிய குடும்பத்தில் இருக்கும் கோள்கள்) நிழல், மற்றொரு வான் பொருளில் விழுவதைத்தான் கிரகணம் என்கிறோம். கிரகணம் வெறும் நிழல்தான். சூரியனை மறைக்கும் நிலவின் நிழல் பூமியில் விழுவது சூரிய கிரகணம், பூமியின் நிழல் நிலவில் விழுவது சந்திர கிரகணம். சந்திர கிரகணத்தின்போது, சந்திரன் தன் ஒளியை இழக்கும். ஒரு கருப்பு நிழல் சந்திரனை மெல்ல மெல்ல மறைக்கத் தொடங்கும். சிறிது நேரம் கழித்து அந்த கருப்பு நிழல் மறுபடியும் விலகி மெல்ல மெல்ல சந்திரன் தன் ஒளியை மீண்டும் பெறுகிறது.

சந்திர கிரக்ணம் என்பது பௌர்ணமி அன்று நிகழும், சூரிய கிரகணம் என்பது அமாவாசை அன்று நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் கிரகணம் என்பது ஒரு நிழல் விளையாட்டுதான். இவற்றில் சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் காண முடியாது. வழக்கமாக கிரகணத்தின் போது கோயில் நடை அடைக்கப்படும். ஆனால் இன்று பங்குனி உத்திரம் என்பதால் கோயில் நடை அடைக்கப்படாது. 

அந்த வகையில் இன்று சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த நிகழ்வின் போது சூரியனுக்கும் நிலவுக்கும் நடுவே பூமி வரும். ஆனால் இன்று வரும் சந்திர கிரகணத்தின் போது பூமி முழுமையாக வராமல் பகுதியாக மட்டுமே வரும். எனவே இது பகுதி சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதனை பெனும்பிரல் சந்திர கிரகணம் என கூறுவார்கள்.

இந்த சந்திர கிரகணம் இந்திய நேரப்படி இன்று காலை சரியாக 10.24 மணிக்கு தொடங்கும். சுமார் 12 .43 மணியளவில் உச்சம் அடையும். பிற்பகல் 3.01 மணிக்கு கிரகணம் முடிகிறது. சந்திர கிரகணத்தின் மொத்த நேரம்  4.36 மணி நேரமாகும். பகல் நேரத்தில் கிரகணம் தோன்றுவதால் இந்தியாவில் இதனை காண முடியாது.

அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், தெற்கு நார்வே மற்றும் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் இந்த சந்திர கிரணத்தை காண முடியும். சந்திர கிரகணத்தை அடுத்து, 15 நாட்களில் முழு சூரிய கிரகணம் நிகழ உள்ளது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DC vs RR LIVE Score: விக்கெட்டை விட்டாலும் அதிரடியாக இலக்கைத் துரத்தும் ராஜஸ்தான்; தடுக்கும் முனைப்பில் டெல்லி!
DC vs RR LIVE Score: விக்கெட்டை விட்டாலும் அதிரடியாக இலக்கைத் துரத்தும் ராஜஸ்தான்; தடுக்கும் முனைப்பில் டெல்லி!
DC vs RR Innings Highlights: ஆரம்பம் முதல் இறுதி வரை அதிரடி காட்டிய டெல்லி; ராஜஸ்தான் அணிக்கு 222 ரன்கள் இலக்கு!
DC vs RR Innings Highlights: ஆரம்பம் முதல் இறுதி வரை அதிரடி காட்டிய டெல்லி; ராஜஸ்தான் அணிக்கு 222 ரன்கள் இலக்கு!
12th Supplementary Exam: பிளஸ் 2 துணைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு; மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
12th Supplementary Exam: பிளஸ் 2 துணைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு; மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Kerala Mayor:
Kerala Mayor: "ஜாமின் கூட கிடையாது" கேரளாவின் இள வயது பெண் மேயர் மீது வழக்கு - என்னதான் நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Selvaperunthagai pressmeet|”ஜெ. நினைவிடம் பாருங்க! காமராசருக்கு மட்டும் ஏன் இப்படி?”செல்வப்பெருந்தகைNanguneri Chinnadurai|’’அவங்களும் நல்லா படிச்சு மேல வரணும்’’ - சின்னதுரை கல்வியே ஆயுதம்!Transgender Nivetha | ‘’டாக்டர் தான் ஆகணும்..NEET நம்பிதான் இருக்கேன்’’ திருநங்கை நிவேதா பேட்டிGujarat Elections 2024 | ’’கை இல்லனா என்ன..அதான் கால் இருக்கே!’’காலால் வாக்களித்த மாற்றுத்திறனாளி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DC vs RR LIVE Score: விக்கெட்டை விட்டாலும் அதிரடியாக இலக்கைத் துரத்தும் ராஜஸ்தான்; தடுக்கும் முனைப்பில் டெல்லி!
DC vs RR LIVE Score: விக்கெட்டை விட்டாலும் அதிரடியாக இலக்கைத் துரத்தும் ராஜஸ்தான்; தடுக்கும் முனைப்பில் டெல்லி!
DC vs RR Innings Highlights: ஆரம்பம் முதல் இறுதி வரை அதிரடி காட்டிய டெல்லி; ராஜஸ்தான் அணிக்கு 222 ரன்கள் இலக்கு!
DC vs RR Innings Highlights: ஆரம்பம் முதல் இறுதி வரை அதிரடி காட்டிய டெல்லி; ராஜஸ்தான் அணிக்கு 222 ரன்கள் இலக்கு!
12th Supplementary Exam: பிளஸ் 2 துணைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு; மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
12th Supplementary Exam: பிளஸ் 2 துணைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு; மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Kerala Mayor:
Kerala Mayor: "ஜாமின் கூட கிடையாது" கேரளாவின் இள வயது பெண் மேயர் மீது வழக்கு - என்னதான் நடந்தது?
"400 தொகுதிகளில் வெற்றி பெற நினைப்பதற்கு இதுதான் காரணம்" பிரதமர் மோடி புதிய சர்ச்சை பேச்சு!
அந்தரங்க உறுப்பில் கல்லை கட்டி சித்திரவதை! நீட் தேர்வுக்கு தயாரான மாணவருக்கு நேர்ந்த கொடூரம்!
அந்தரங்க உறுப்பில் கல்லை கட்டி சித்திரவதை! நீட் தேர்வுக்கு தயாரான மாணவருக்கு நேர்ந்த கொடூரம்!
காஷ்மீரில் என்கவுன்டர்: பதுங்கியிருந்த பயங்கரவாத அமைப்பின் முக்கிய புள்ளி சுட்டுக் கொலை
காஷ்மீரில் என்கவுன்டர்: பதுங்கியிருந்த பயங்கரவாத அமைப்பின் முக்கிய புள்ளி சுட்டுக் கொலை
சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா..?; நடந்தது என்ன? - சிறைத்துறை விளக்கம்
சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா..?; நடந்தது என்ன? - சிறைத்துறை விளக்கம்
Embed widget