மேலும் அறிய

Lok Sabha Security Breach: மக்களவைக்குள் துப்பாக்கி கொண்டு வந்திருந்தால் என்னவாகியிருக்கும்? - கனிமொழி எம்.பி

நேற்று நடந்த பாதுகாப்பு குளறுபடியினை அன்றாட நிகழ்வு போல் கடந்து செல்ல வேண்டும் என மத்திய அரசு நினைக்கின்றது.

மக்களவையில் நேற்று அதாவது டிசம்பர் 13ஆம் தேதி ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக  மக்களவையில் விவாதிக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட 15 எம்.பிக்கள் நாடாளுமன்ற நடப்புக்கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்து சபாநாயகர் ஓம். பிர்லா உத்தரவிட்டுள்ளார். அந்த 15 எம்.பி.,களில்  கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன், ரம்யா ஹரிதாஸ், ஆகியோர் அடங்குவர். 

இதற்கு பின்னர் நாடாளுமன்ற வளகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறுகையில், நேற்று நடந்த பாதுகாப்பு குளறுபடியினை அன்றாட நிகழ்வு போல் கடந்து செல்ல வேண்டும் என மத்திய அரசு நினைக்கின்றது. ஆனால் நேற்று நடந்த சம்பவம் என்பது பாதுகாப்பு பிழை. நேற்று மக்களவைக்குள் குதித்த நபர் துப்பாக்கி கொண்டு வந்திருக்கலாம், விஷப்புகை கொண்டுவந்திருக்கலாம் அல்லது வேறு எதாவது கொண்டு வந்து இருக்கலாம். இதனை எதிர்க்கட்சிகள் கடந்து போகவேண்டும் என பாஜக நினைக்கின்றது. ஒன்றிய அரசுத் தரப்பில் பிரதமரோ, உள்துறை அமைச்சரோ அல்லது பாராளுமன்றதிற்கு பொறுப்பேற்க வேண்டிய சபாநாயகரோ இந்த விவகாரம் தொடர்பாக பதில் சொல்ல வேண்டிய இடத்தில் நிற்க வேண்டும் என்பதில் அவர்கள் தயாராக இல்லை. இதுவரை இது தொடர்பாக பிரதமரோ உள்துறை அமைச்சரோ ஒரு அறிக்கை கூட இதுவரை வெளியிடவில்லை. இது தொடர்பாக மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் கேள்வி எழுப்பினால் மாநிலங்களவையில் இருந்து மாநிலங்களவையில் இருந்து ஒருவரும் மக்களவையில் இருந்து சுமார் 13, 14 பேர் சஸ்பண்ட் செய்யப்படுகிறார்கள். ஆனால் மக்கவைக்குள் குதித்து அமளியில் ஈடுப்பட்ட இரண்டு பேருக்கு கையெழுத்து போட்டுக் கொடுத்த பாஜக எம்.பி அவையிலேயே இருக்கின்றார். அவரை அழைத்து விசாரணை நடத்தப்படவில்லை. அவரை நோக்கி ஒரு கேள்வி கூட கேடகப்படவில்லை. பாராளுமன்றத்தில் அவருக்கு சஸ்பெண்ட் வழங்கப்படவில்லை. அவர் பாராளுமன்றத்தில் இன்னும் இருக்கின்றார். கேள்வி கேட்ட நாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளோம். இதுதான் இவர்களின் நியாயமா? ஜனநாயகமா? 

பாஜகவினருக்கு தெரிந்த ஒரே வழி அவர்களுடைய எதிரிகள் இருந்தால் அவர்களை அவையில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்ற மனோபாவத்தில் உள்ளனர். அப்படித்தான் விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட மசோதாவுக்கு எதிராக நாங்கள் போராடி வெளிநடப்பு செய்யப்பட்டபோது, தொழிலாளர்கள் மசோதாவை நிறைவேற்றியவர்கள். இவர்கள் நிச்சயமாக அவையில் இருந்து அனைவரையும் வெளியேற்றிவிட்டு பாராளுமன்றம் பாதுகாப்பாக உள்ளது என கூறக்கூடத் தயங்கமாட்டார்கள். 

இன்றைக்கு திமுக எம்.பி பார்த்திபன் அவர்கள் அவைக்கே வரவில்லை. ஆனால் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். பாஜகவினருக்கு மொத்தத்தில் எதிர்கட்சியினரை சஸ்பெண்ட் செய்யவேண்டு என்ற நோக்கத்தில் அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர். தொடர்ந்து இதிபோல சஸ்பெண்ட் செய்தால் அவையில் கேள்வி கேட்பவர்கள் எண்ணிக்கை குறையும். பாஜவினருக்கு தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மீது ஒரு காழ்புணர்வு இருக்கின்றது. பாஜகவால் கால் பதிக்க முடியாத இடம் தென்னிந்தியா. நேற்று பாரளுமன்றத்தில் அந்த புகைகூட சரியாக வெளியேற்றப்படவில்லை. ஆனால் அதற்குள் பாராளுமன்றத்தினை கூட்டினர். அப்போதாவது பிரதமரோ உள்துறை அமைச்சரரோ அந்த சம்பவம் குறித்து எதாவது பேசி இருக்கலாம். ஆனால் உள்ளே குதித்தவர்களைப் பிடித்த எம்.பிக்களிடம் கூட அவர்கள் பேசவில்லை” இவ்வாறு கனிமொழி எம்.பி பேசினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"எமர்ஜென்சி பற்றி இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வது முக்கியம்" - பிரதமர் மோடி!
Vikravandi:  விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 29 பேர் போட்டி!
Vikravandi: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 29 பேர் போட்டி!
Breaking News LIVE:  விக்கிரவாண்டி இடைத்தேர்தல்:  29 வேட்பாளர்கள் களத்தில்!
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 29 வேட்பாளர்கள் களத்தில்!
"பஸ் ஏற வந்தாலே  தண்ணீரில் வழுக்கி விழுந்திடுவோம்" - மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் அவல நிலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!Jagan Mohan Reddy joins Congress : DK சிவகுமாருடன் ரகசிய ஆலோசனை?காங்கிரஸில் இணையும் ஜெகன்!Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தாSubramanian swamy slams Modi :  ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"எமர்ஜென்சி பற்றி இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வது முக்கியம்" - பிரதமர் மோடி!
Vikravandi:  விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 29 பேர் போட்டி!
Vikravandi: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 29 பேர் போட்டி!
Breaking News LIVE:  விக்கிரவாண்டி இடைத்தேர்தல்:  29 வேட்பாளர்கள் களத்தில்!
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 29 வேட்பாளர்கள் களத்தில்!
"பஸ் ஏற வந்தாலே  தண்ணீரில் வழுக்கி விழுந்திடுவோம்" - மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் அவல நிலை
செங்கல்பட்டு: மதுவுக்கு எதிராக மாணவர்களுடன் மாஸ் காட்டிய மாவட்ட ஆட்சியர் - குவியும் பாராட்டு
செங்கல்பட்டு: மதுவுக்கு எதிராக மாணவர்களுடன் மாஸ் காட்டிய மாவட்ட ஆட்சியர் - குவியும் பாராட்டு
Thirumavalavan: மக்களவையில் திருமாவளவன் கேட்ட கேள்வி.. பேசும்போதே மைக் ஆஃப் செய்த சபாநாயகர் - குவியும் கண்டனம்
Thirumavalavan: மக்களவையில் திருமாவளவன் கேட்ட கேள்வி.. பேசும்போதே மைக் ஆஃப் செய்த சபாநாயகர் - குவியும் கண்டனம்
NEET PG 2024 Exam: ஒத்திவைக்கப்பட்ட நீட் முதுகலைத் தேர்வு எப்போது?- வெளியான தகவல்
NEET PG 2024 Exam: ஒத்திவைக்கப்பட்ட நீட் முதுகலைத் தேர்வு எப்போது?- வெளியான தகவல்
Silambarasan - Vengal Rao: மருத்துவ உதவி கேட்ட வெங்கல் ராவ்.. யோசிக்காமல் சிம்பு செய்த நிதியுதவி!
Silambarasan - Vengal Rao: மருத்துவ உதவி கேட்ட வெங்கல் ராவ்.. யோசிக்காமல் சிம்பு செய்த நிதியுதவி!
Embed widget