Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் 75 சதவீதம், தெலங்கானாவில் 61.16 சதவீதம்.. வெளியான வாக்குப்பதிவு சதவீதம்..!
Lok Sabha Election 2024 LIVE: மக்களவை தேர்தலுக்கான4 ஆம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து உடனுக்குடன் காணலாம்.

Background
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏற்கனவே மூன்று கட்டமாக நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து இன்று 4ம் கட்டமாக 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 17.7 கோடி பேர் இன்று வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதற்காக ஒரு லட்சத்து 92 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆந்திராவில் 25 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், ஜம்மு & காஷ்மீரில் 1 தொகுதி, ஜார்க்கண்டில் நான்கு தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகள், மகாராஷ்ட்ராவில் 11 தொகுதிகள், ஒடிஷாவில் நான்கு தொகுதிகள், தெலங்கானாவில் 17 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 13 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 8 தொகுதிகள் என மொத்தம் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
96 தொகுதிகளில் போட்டியிட நான்காயிரத்து 264 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதிகபட்சமாக, தெலங்கானாவில் உள்ள 17 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு 1488 வேட்புமனுப் படிவங்களும், அதைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகளுக்கு 1103 வேட்புமனுக்களும் கிடைக்கப் பெற்றன. இறுதியில் சில வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றதால், தற்போது ஆயிரத்து 717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 4 வது கட்டத்திற்கு ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சராசரி எண்ணிக்கை 18 ஆக உள்ளது. இதனிடையே மக்களவை தேர்தல் குறித்து சுவாரசியமான விஷயங்களை உடனுக்குடன் காணலாம்.
Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் 75 சதவீதம், தெலங்கானாவில் 61.16 சதவீதம்.. வெளியான வாக்குப்பதிவு சதவீதம்..!
மக்களவை தேர்தலின் 4வது கட்ட தேர்தலானது இன்று ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நடந்து முடிந்தது. அதில், மாலை 6 மணி வரை 75 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல், மாலை 5 மணி நிலவரப்படி 61.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பஞ்சாப் தேர்தலுக்கான நட்சத்திர பேச்சாளர்களை அறிவித்த ஆம் ஆத்மி கட்சி
In view of the Lok Sabha election campaign, Aam Aadmi Party released the list of star campaigners for Punjab.
— ANI (@ANI) May 13, 2024
Delhi CM Arvind Kejriwal's wife Sunita Kejriwal's name also included in the list#LokSabhaElections2024 pic.twitter.com/0QNwhSeamk




















