Watch video: தனக்குத் தானே தாலி கட்டிக் கொண்ட குஜராத் பெண்! முடிந்தது சோலோ கல்யாணம்!
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஷாமா பிந்து ஜூன், 11 ஆம் தேதி அம்மாநிலத்தில் உள்ள கோயில் ஒன்றில் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கூறியிருந்தார்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஷாமா பிந்து ஜூன், 11 ஆம் தேதி அம்மாநிலத்தில் உள்ள கோயில் ஒன்றில் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கூறியிருந்தார். இதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், திட்டமிடப்பட்ட நாளுக்கு முன்பே, அவர் தன்னை தானே திருமணம் செய்து கொண்டார்.
View this post on Instagram
அவரின் திருமணம் இன்று நடைபெற்றுள்ளது. பாரம்பரியமுறைப்படி நடைபெற்ற திருமணத்தில் தனக்கு தானே அவர் தாலி கட்டி கொண்டார். பின்னர், தோழிகளுடன் சேர்ந்து நடனமாடி மகிழ்ந்தார்.
ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்வது இந்து மதத்திற்கு எதிரானது என்று, பிந்துவின் திருமணம் கோயிலில் நடத்துவதற்கு அனுமதி வழங்க முடியாது என குஜராத் பா.ஜ.க. தலைவர் சுனிதா சுக்லா தனது எதிர்ப்பு குரலை பதிவு செய்திருந்தார்.
இது தொடர்பாக சுனிதா கூறுகையில், ”வதோதராவின் ஷாமா பிந்து தன்னைத்தானே திருமண செய்வதாக அறிவித்துள்ளார். இத்தகைய திருமணங்கள் இந்து மதத்திற்கு எதிரானது. அவர் கோயிலில் திருமணம் செய்வதாக கூறியிருக்கிறார், இதற்கு அனுமதி வழங்க முடியாது. அவருடைய முடிவும் முற்றும் இந்து மதத்திற்கு எதிராக உள்ளது. இவரின் முடிவால், இந்துக்களின் மக்கள் தொகையில் சரிவு ஏற்படும். மதத்திற்கு எதிராக சென்றால் சட்டம் ஒழுங்கே இருக்காது.” என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் உறுப்பினர் மிலிந்த் டியோரா எதிர்ப்பு:
காங்கிரஸ் உறுப்பினர் மிலிந்த் டியோரா ஷாமாவின் முடிவுக்கு இது ஆரோக்கியமில்லாத மனநிலையில் எடுக்கப்பட்ட முடிவு. இதுபோன்ற முடிவுகள் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் இல்லை என்று முத்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகாந்த் வாக்ரைய்யா என்று கூறியுள்ளார். தன்னைத்தானே திருமணம் செய்துகொள்வது இந்தியாவில் சட்டப்பூர்வமானது இல்லை. திருமணம் என்றால் அதில் இருவர் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
”எனக்கு யாரையும் திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லை. தெளிவுடன் இம்முடிவை எடுத்திருக்கிறேன். நான் செய்வது சரி என்றே உணர்கிறேன். என்னை முன்னுதாரணமாக மற்றவர்கள் எடுத்துக்கொள்ளட்டும். ”என்று பிந்து கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் வடோதராவைச் சேர்ந்த ஷமா பிந்துவுக்கு (Kshama Bindu) வரும் ஜூன் 11 ஆம் தேதி திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்புடன் நடந்து வந்தது. ஒரு திருமணத்திற்கு என்னெல்லாம் தேவையோ அதெல்லாம் தயார் செய்யப்பட்டது.
மெஹந்தி, இசை கச்சேரி, மேடை அலங்காரம், அழைப்பிதழ், மணப்பெண்ணின் பிரத்யேக ஆடை உள்ளிட்டவைகள் எல்லாம் இடம்பெற்றன. ஆனால், இந்த திருமணத்தில் மணமகன் மட்டும் மிஸ்ஸிங். பிந்துவுக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லையாம். ஆனால், அவருக்கு மணப்பெண் கோலத்தில்தான் இருக்க வேண்டும் என்ற ஆசை, திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதற்கான திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்துவந்தார் பிந்து.
இது குறித்து பிந்து கூறுகையில், ‘எனக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லை. ஆனால் நான் மணப்பெண்ணாக இருக்க ஆசைப்பட்டேன். அதனால், நான் என்னை திருமணம் செய்ய முடிவெடுத்தேன். முதலில் உங்களை நீங்கள் காதலிக்க வேண்டும். அதன் வெளிப்பாடாக என் செயலை காண்கிறேன். நான் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பேன் என கருதுகிறேன். ஒருவர் தன்னையே மணந்துகொள்வது என்பது, வாழ்நாள் முழுவதும் தன்னை முழுவதுமாக நேசிக்கவும், உறுதுணையாக இருக்கவும் உறுதி ஏற்பதாகும். ஒருவர் மீது காதல் மலர்வதால், அவரை திருமணம் செய்துகொள்வார்கள். நான் என்னைக் காதலிக்கிறேன்; ஆகையால், நான் என்னை திருமணம் செய்துகொள்ளபோகிறேன்.” என்றார்.
இதன் மூலம் பெண்களின் உணர்வுகள், விருப்பங்களுக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட வேண்டும் என்பதை குறிப்பிடுவதாக கூறுகிறார் பிந்து.
இவருடைய திருமணத்தில் பிந்துவின் பெற்றோர்கள், அவர் முடிவை ஏற்றுக்கொண்டவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். பிந்து தேன்நிலவுக்கு கோவா செல்ல திட்டமிட்டிருக்கிறார். ’என் பெற்றோர் எனது திருமணத்தை ஆசீர்வதித்து ஏற்றுக்கொண்டுள்ளனர். என் மகிழ்ச்சியே தங்களது மகிழ்ச்சி என்று தெரிவித்து என் முடிவுக்கு மகிழ்ச்சியடைந்துள்ளனர். என்று கூறியுள்ள பிந்து திருமணத்தின்போது எடுத்துக்கொள்வதற்காக 5 உறுதிமொழிகளை எழுதி வைத்திருக்கிறார்.
இந்நிலையில் ஷாமா பிந்துவின் தனிப்பட்ட முடிவிற்கு பல எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது.