மேலும் அறிய

Sabarimala : சபரிமலையில் மகரவிளக்கு பூஜை நிறைவு....நாளை மறுநாள் கோயில் நடை அடைப்பு...

சபரிமலையில் மகரவிளக்கு நெய் அபிஷேக வழிபாடு பூஜை இன்றுடம் நிறைவடைகிறது. நாளை மறுநாள் கோயில் நடை அடைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sabarimala : சபரிமலையில் மகரவிளக்கு நெய் அபிஷேக வழிபாடு பூஜை இன்றுடம் நிறைவடைகிறது. நாளை மறுநாள் கோயில் நடை அடைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை

கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2022-2023ஆம் ஆண்டிற்கான மண்டல, மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு கடந்த நவம்பர் 16-ஆம் தேதி திறக்கப்பட்டது. கொரோனா தொற்று கட்டுப்பாடுகளால் கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்த இந்த முறை அத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. இதனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 

நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம், 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு முறையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், கேரளா, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருகின்றனர். பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைவருக்கும் தேவசம் போர்டு சார்பில் எளிதாக சாமி தரிசனம் செய்யும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது. 

அதேசமயம் சன்னிதானம் பகுதியில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தரிசனம் செய்யும் பக்தர்களை உடனடியாக பக்தர்களை வெளியேற்ற காவல்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தரிசன நேரம் குறைப்பு

சபரிமலையில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1.30 மணிக்கு அடைக்கப்படும். பின்னர் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 11.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நாளை மகரவிளக்கு பூஜை நிறைவடைவதை முன்னிட்டு, இன்று முதல் தரிசன நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. பின்பு, மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் நடை அடைப்பு

நடப்பு சீசனின் கடைசி  நெய் அபிஷேகம் இன்றுடம் (ஜனவரி 17) நிறைவடைகிறது. இதனால் சபரிமலையில் அதிக அளவிலான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.  நடப்பு சீசனின் முன்னிட்டு கடந்த 15ஆம் தேதி தொடங்கிய மகரவிளக்கு பூஜை நாளை நிறைவடைகிறது. மேலும் நாளை வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், நாளை இரவு 10 மணிக்கு மாளிகப்புரத்தம்மன் குருதி  நிகழ்ச்சி நடைபெறும். நாளை மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, காலை 6.30 மணிக்கு நடை அடைக்கப்படும். அன்றைய தினம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. மேலும், மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடுத்த மாதம் பிப்ரவரி 12ஆம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

48 லட்சம் பக்தர்கள் தரிசனம்

2022-2023ஆம் ஆண்டிற்கான மண்டல, மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு  நேற்று வரை 48 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். நடப்பு சீசன் முடிய இன்னும் 2 நாட்கள்  உள்ளன. இந்த 2 நாட்களில் இரண்டு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
பொம்மையால் வந்த வினை! - தரையில் கிடந்ததை எடுத்துப்பார்த்த 3 சிறுவர்கள் பலி!  
பொம்மையால் வந்த வினை! - தரையில் கிடந்ததை எடுத்துப்பார்த்த 3 சிறுவர்கள் பலி!  
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja Arrest : ''H.ராஜா குற்றவாளி!''1 வருடம் சிறை தண்டனை..நீதிமன்றம் அதிரடிThiruvannamalai landslide | மண்ணில் புதைந்த 7 பேர்! திருவண்ணாமலையில் நிலச்சரிவு! தற்போதைய நிலை என்ன?MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
பொம்மையால் வந்த வினை! - தரையில் கிடந்ததை எடுத்துப்பார்த்த 3 சிறுவர்கள் பலி!  
பொம்மையால் வந்த வினை! - தரையில் கிடந்ததை எடுத்துப்பார்த்த 3 சிறுவர்கள் பலி!  
Narendra Modi : பிரதமர் பாராட்டு தெரிவிக்கிறார்...நடிகர் ஓய்வை அறிவிக்கிறார்..என்னவோ தப்பா இருக்கே
Narendra Modi : பிரதமர் பாராட்டு தெரிவிக்கிறார்...நடிகர் ஓய்வை அறிவிக்கிறார்..என்னவோ தப்பா இருக்கே
அண்ணாமலை ஒரு தோல்வியுற்ற அரசியல்வாதி - அமைச்சர் சேகர்பாபு காட்டம்
அண்ணாமலை ஒரு தோல்வியுற்ற அரசியல்வாதி - அமைச்சர் சேகர்பாபு காட்டம்
முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
ஆளுநருக்கு, ”திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா”... உள்ளூர் உணவுப் பொருட்கள் கொடுத்து அசத்தல்
ஆளுநருக்கு, ”திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா”... உள்ளூர் உணவுப் பொருட்கள் கொடுத்து அசத்தல்
Embed widget