கேரளாவில் அதிர்ச்சி! டேட்டிங் செயலி மூலம் 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்: 14 பேர் மீது போக்சோ வழக்கு
16 வயது சிறுவன் பல நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் டேட்டிங் செயலியை பயன்படுத்தி வந்த 16 வயது சிறுவன் பல நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் 16 வயது சிறுவன் ஒருவன் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வந்ததாக தெரிகிறது. அப்போது அந்தச் சிறுவனுக்கு டேட்டிங் செயலி மூலம் சிலருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதை பயன்படுத்திக் கொண்ட அவர்கள், அச்சிறுவனை வரவழைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள், அந்தச் சிறுவனை பாலியல் தொல்லைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அந்தச் சிறுவனின் தாய் இச்சம்பவத்தை கண்டறிந்து போலீஸில் புகாரளித்துள்ளார். அதன் பேரில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை கண்டுபிடிக்க விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவனை காசர்கோடு, கண்ணூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களை சேர்ந்த பலர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தெரியவந்தது.
இதையடுத்து அடையாளம் காணப்பட்ட 14 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேரும் 25 முதல் 51 வயதுக்குட்பட்டவர்கள். அதில் ரயில்வே ஊழியர், அரசியல்வாதி ஆகியோர் அடங்குவர் என்று போலீசார் தெரிவித்தனர். கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள், அந்தச் சிறுவனை பாலியல் தொல்லைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இச்சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 (போக்சோ சட்டம்), (The Protection of Children from Sexual Offenses (POCSO) Act, 2012) என்பது , இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும். இதனைச் சுருக்கமாக போக்சோ சட்டம் அல்லது போக்ஸோ சட்டம் என அழைக்கப்படுகிறது. இச்சட்டம் , மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10ம்தேதியும், மக்களவையில் மே மாதம் 22ம் தேதியும் நிறைவேற்றப்பட்ட சட்டமாகும்.
இதற்கான விதிமுறைகளும் உருவாக்கப்பட்டு, நவம்பர் 14ம் தேதி அரசிதழ் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இச்சட்டம் வரும் முன் , குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இப்பிரிவுகள், குழந்தைகள், வயது வந்தவர்கள் என்ற வித்தியாசமின்றி வழக்குகளைக் கையாண்டன.
18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச் சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்/வன்முறை, பாலியல் துன் புறுத்தல்/சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது.
30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடிய வேண்டும். இது மிகத் தேவையானது. சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங் காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம் என சட்டம் குறிப்பிடுகிறது.





















