காலையும் சாம்பார் மாலையும் சாம்பார்.. அப்செட்டான பெண்.. கடைசியில் எடுத்த ஷாக் முடிவு
கர்நாடக பெண் ஒருவர் காலையில் சமைத்த சாம்பாரை இரவு உணவாக சாப்பிட வேண்டும் என்ற குற்ற உணர்ச்சியில் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

காலையில் சமைத்த சாம்பாரை இரவு உணவாக சாப்பிட வேண்டும் என்பதால் குற்ற உணர்ச்சியில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
காலையும் சாம்பார் மாலையும் சாம்பார்:
பெங்களூரு புறநகரில் உள்ள தேவனஹள்ளி தாலுகாவில் உள்ள சவுக்கனஹள்ளியைச் சேர்ந்தவர் நாகரத்னா. இவர்தான் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரை பற்றி காவல்துறை தரப்பு கூறுகையில், "நாகரத்னா, மன நல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்கோபியான இவர், சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட கோபப்படும் தன்மை கொண்டவர். இந்த மனநிலையே, அவரை தற்கொலை எடுக்கும் முடிவுக்கு தூண்டி இருக்கும். நாகரத்னா ஒரு தையல்காரர். இவரது கணவர் ரியல் எஸ்டேட் தரகர். இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.
கடைசியில் பெண் எடுத்த ஷாக் முடிவு:
கடந்த வியாழக்கிழமை, வேலைக்குச் செல்வதற்கு முன்பு நாகரத்னா காலையில் சாம்பார் சமைத்திருந்தார். அன்று மாலையில் வீடு திரும்பியபோது, அதே உணவைச் சாப்பிட வேண்டியிருந்ததால் வருத்தப்பட்டுள்ளார். இவரது கணவர் அவரை ஆறுதல்படுத்த முயன்றார்.
சாப்பிடுவதற்கு வேறு உணவு பொருள்களை வழங்கியுள்ளார். பின்னர், இரவு 8.30 மணியளவில், நாகரத்னா, குளியலறைக்குச் சென்றார். நீண்ட நேரம் வெளியே வரவில்லை. அவர் பதிலளிக்காததால், அவரது கணவர் கதவை உடைத்து சென்றபோது, நாகரத்னா தனது துப்பட்டாவால் தூக்கில் தொங்கியிருப்பதைக் கண்டார்.
இவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். நாகரத்னாவின் மகள் அளித்த புகாரின் அடிப்படையில், இயற்கைக்கு மாறான மரணம் என விஸ்வநாதபுரா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வேறு ஏதேனும் காரணத்திற்காக அவர் இந்த முடிவை எடுத்தாரா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்" என்றார்.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019)
இதையும் படிக்க: Rinku Singh Wedding: திருமண தேதியை அறிவித்த ரிங்கு சிங் - பிரியா சரோஜை எங்கு? எப்போது? கரம்பிடிக்கிறார்




















