மேலும் அறிய

இன்று மாலை ராஜினாமா செய்கிறார் கர்நாடக அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா!

கர்நாடக மாநிலத்தில் ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் ஈஸ்வரப்பா இன்று மாலை முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை சந்தித்து எனது ராஜினாமா கடிதத்தை வழங்க இருக்கிறார்.

கர்நாடக மாநிலத்தில் லஞ்ச புகார் அளித்த ஒப்பந்ததாரர் ஒருவரின் தற்கொலை வழக்கில்  குற்றம்சாட்டபட்ட அமைச்சர் ஈஸ்வரப்பா தன் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார்.

கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல். இவரிடம் மாநில‌ ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா 40 சதவீத கமிஷன் கேட்டதாக புகார் அளித்திருந்தார். இந்நிலையில் கடந்த 12-ம் தேதி சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து சந்தோஷ் பாட்டீலின் குடும்பத்தார், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ஈஸ்வரப்பாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈட்டுபட்டனர். இதனால் சந்தோஷ் பாட்டீலை தற்கொலைக்கு தூண்டியதாக அமைச்சர் ஈஸ்வரப்பா, அவரது உதவியாளர்கள் ரமேஷ், பசவராஜ் ஆகியோர் மீது உடுப்பி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் சித்தராமையா, மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து, ஈஸ்வரப்பாவை பதவியில் இருந்து நீக்க மனு அளித்திருக்கின்றனர்.

அதேவேளையில், ஈஸ்வரப்பாவுக்கு பாஜக சார்பிலும், பதவியை விட்டு விலகுமாறு எதிர்ப்புகள் எழுந்தன. அவரால் கட்சிக்கு ஊழல் குற்றச்சாட்டில் அவப்பெயர் ஏற்படுவதாக பாஜக மூத்த தலைவர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. பாஜகவின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படாமல் இருக்க ஈஸ்வரப்பா பதவி விலக வேண்டும் என்று எதிர்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில் ஈஸ்வரப்பா, " எனக்கும், சந்தோஷ் பாட்டீலுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆனால் காங்கிரஸார் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் என் மீது எந்த தவறும் இல்லை என விரைவில் நிரூபிப்பேன். அதுவரை அமைச்சர் பதவியில் இருந்து விலகியிருக்க முடிவெடுத்துள்ளேன். நான் இந்த அளவிற்கு உயர, என்னை வளர்த்தெடுத்த கட்சிக்கும், எனக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கும் என்னால் எவ்வித இடைஞ்சலும் ஏற்பட விரும்பவில்லை. கட்சி நலனை கருத்தில் கொண்டு, வெள்ளிக்கிழமை முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்து எனது ராஜினாமா கடிதத்தை வழங்க இருக்கிறேன்" என்று நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

இதுகுறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை(Basavaraj Bommai) கூறுகையில், "பிரேதப் பரிசோதனை முடிந்து சந்தோஷ் பாட்டீலின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எத்தகைய தலையீடும் இல்லாமல் முறையான விசாரணை நடைபெறும்" என்றார்.

மேலும், சந்தோஷ் பாட்டீல் ஒப்பந்ததாரராக பணி செய்ததற்கு ரூ.4 கோடி தொகையை கேட்டுள்ளார். அதற்கு ஈஸ்வரப்பா வேலை செய்ததற்கான தொகையை வழங்க 40% கமிசன் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று, வேலைக்கான ஒப்பந்தம் என்ற பெயரில் ஏதும் கையெழுத்தாகவில்லை. சந்தோஷ் பாட்டீலுக்கு வாய் வழியாகதான் வேலைக்கான தகவல் சொல்லப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிட்டத்தக்கது. அவர் வேலை செய்ய தொடங்கி 18 மாதங்கள் ஆனபோது, அதற்கான சம்பளம் என்று எதையும் சந்தோஷ் பாட்டீல் பெறவில்லை. அமைச்சர் ஈஸ்வரப்பாவும் வேலை தொடர்பான எழுத்துப் பூர்வமான ஆதாரம் ஏதும் இல்லை.

 

 

 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
Embed widget