கரண்ட் பில் பார்த்து ஷாக்கான கங்கனா ரனாவத்.. இருந்தாலும் ஆளே இல்லாத வீட்டுக்கு இது ரொம்ப ஓவர்
இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்கள் யாரும் வசிக்காத தனது வீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் கரண்ட் பில் வந்திருப்பதாக அவர் புகார் கூறியுள்ளார். மலிவான விளம்பரத்திற்காக இப்படிப்பட்ட குற்றச்சாட்டை கங்கனா சுமத்தியிருப்பதாக காங்கிரஸ் அவரை சாடியுள்ளது.

ஆளே இல்லாத வீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் மின் கட்டணம் கேட்பதாக பாஜக எம்பியும் நடிகையுமான கங்கனா ரனாவத் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்கள் யாரும் வசிக்காத தனது வீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் கரண்ட் பில் வந்திருப்பதாக அவர் புகார் கூறியுள்ளார். மலிவான விளம்பரத்திற்காக இப்படிப்பட்ட குற்றச்சாட்டை கங்கனா சுமத்தியிருப்பதாக காங்கிரஸ் அவரை சாடியுள்ளது.
கங்கனா ரனாவத்திற்கு ஒரு லட்சம் மின் கட்டணமா?
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அந்த ஆட்சியை எதிர்த்து பாஜக பல்வேறு புகார்களை கூறி வருகிறது. அந்த வகையில், ஹிமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட கங்கனா ரனாவத், தனக்கு வந்த மின் கட்டணம் குறித்து பரபரப்பு குற்றம் சுமத்தியுள்ளார்.
மண்டி தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கங்கனா, "நாடு முழுவதும் பிரதமர் மோடி அலையும், காவி அலையும் வீசுகிறது. ஆனால், இமாச்சலப் பிரதேசத்தின் நிலையைப் பார்ப்பது வேதனையாக இருக்கிறது. சமோசாக்கள் குறித்து அரசு நிறுவனங்கள் விசாரணை செய்து வருகின்றன.
என்ன நடக்கிறது என்பதைப் பார்த்து நாங்கள் வெட்கப்படுகிறோம். நீங்கள் தரையில் மிகவும் கடினமாக உழைக்கிறீர்கள். நமது மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வது நமது பொறுப்பு. ஒரு வகையில் அவர்களை ஓநாய்கள் என்று நான் கூறுவேன். நமது மாநிலத்தை அவர்களின் நகங்களிலிருந்து விடுவிக்க வேண்டும்.
விளாசிய காங்கிரஸ்:
இமாச்சலப் பிரதேசத்தில், காங்கிரஸ் இவ்வளவு மோசமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த மாதம், மணாலியில் உள்ள எனது வீட்டிற்கு ரூ. 1 லட்சம் மின்சாரக் கட்டணம் வந்துள்ளது. அங்கு நான் தங்கவே இல்லை. இங்குள்ள நிலையை கற்பனை செய்து பாருங்கள்" என்றார்.
இதற்கு எதிர்வினையாற்றியுள்ள காங்கிரஸ், "இது கங்கனாவின் தரப்பில் நியாயமற்றது. அவருக்கு ஒரு பெரிய பொறுப்பு உள்ளது. மலிவான விளம்பரத்திற்காக அவர் இப்படி பேசியுள்ளார். இதுகுறித்து அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எழுதியிருக்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை" என தெரிவித்துள்ளது.
சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்டத்திற்கு ஆதரவாக பேசிய கங்கனா, "எந்த நபரும், எந்த அமைப்பும், எந்த ஒரு மத அமைப்பு கூட, சட்டத்தை விடப் பெரியதல்ல. அவர்கள் சட்டத்திற்கோ அல்லது அரசியலமைப்பிற்கோ மேலானவர்கள் அல்ல. அதுதான் இந்த மசோதாவின் சாராம்சம். கரையான்களைப் போல நம் நாட்டைத் தின்று கொண்டிருந்த ஊழல் இப்போது முடிவுக்கு வந்தது நமது அதிர்ஷ்டம்" என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

