மேலும் அறிய

தனிநபர் சட்டத்துக்கு எதிராகவும் போக்சோ செல்லுபடியாகும்...கர்நாடக உயர்நீதிமன்றம் கறார்!

முஸ்லிம் மைனர் பெண்ணின் திருமணம்,  இஸ்லாமியத் திருமணச் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டாலும், மைனர் பெண் என்கிற அடிப்படையில் அது செல்லாது.

மைனர் முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்த நபரின் ஜாமீன் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேந்திர பதாமிகர் அமர்வு, அந்த முஸ்லீம் பெண்ணின் பருவ வயது அல்லது 15 வயதுக்கு மேல் திருமணம் செய்வது குழந்தை திருமண தடைச் சட்டத்திற்கு முரணாக இருக்காது என்கிற வாதத்தை நிராகரித்துள்ளது.

முஸ்லிம் மைனர் பெண்ணின் திருமணம்,  இஸ்லாமியத் திருமணச் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டாலும், மைனர் பெண் என்கிற அடிப்படையில் அது செல்லாது, ஏனெனில் அது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ) விதிகளை மீறுவதாகும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தனது சமீபத்திய உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

மைனர் முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்த நபரின் ஜாமீன் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேந்திர பதாமிகர் அமர்வு, அந்த மைனர் பெண்ணின் பருவ வயது அல்லது 15 வயதுக்கு மேல் திருமணம் செய்வது குழந்தை திருமண தடைச் சட்டத்திற்கு முரணாக இருக்காது என்ற வாதத்தை நிராகரித்துள்ளது. 
குழந்தைகள் பாதுகாப்புக்கான போக்ஸோ சட்டம், ஒரு சிறப்புச் சட்டம் என்பதால், இஸ்லாமிய திருமணச் சட்டம் போன்ற தனிநபர் சட்டத்தை மீறுகிறது என்று பெஞ்ச் மேலும் குறிப்பிட்டது. போக்ஸோ சட்டத்தின்படி, எந்தவொரு பெண்ணும் பாலியல் செயல்களில் ஈடுபடுவதற்கான சட்டப்பூர்வ வயது 18 ஆகும்.

தனிநபர் சட்டத்துக்கு எதிராகவும் போக்சோ செல்லுபடியாகும்...கர்நாடக உயர்நீதிமன்றம் கறார்!

ஜூன் 16ஆம் தேதி பெங்களூருவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 17 வயது சிறுமியை பரிசோதித்தபோது கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. சிறுமி மைனர் என்பதால், சுகாதார அதிகாரி போலீசாருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, குழந்தை திருமணத் தடைச் சட்டம், 2006 மற்றும் பிரிவுகள் 4,6,9 (வயது வந்த ஆண் குழந்தைத்திருமணம் செய்ததற்கான தண்டனை) மற்றும் 10 (குழந்தை திருமணம்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றொருபுறம் மைனர் முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்து கருவுறச் செய்ததாகக்கூறி கேஆர் புரம் காவல் நிலையத்தில் மனுதாரர் மீது போக்சோ சட்டம் (பாலியல் வன்கொடுமை) பதிவு செய்யப்பட்டது.

இந்தியாவில் குழந்தைகள் பாதுகாக்கும் கொள்கைகளின் ஓரு பகுதியாக உருவாக்கப்பட்டது தான் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012(The protection of children from sexual offense(pocso) Act 2012). இந்த சட்டம் சுருக்கமாக போக்சோ சட்டம் என அழைக்கப்படுகிறது, மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10 தேதியும், மக்களவையில் மே மாதம் 22 தேதியும் நிறைவேற்றப்பட்டது, நவம்பர் 14-ஆம் தேதி அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்தது.

இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு வரை குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடைபெறும் பொழுது ஐபிசி சட்டம் பிரிவு 375 கற்பழிப்பு, பிரிவு 354 பெண்ணின் அடக்கத்தை மீறுதல், பிரிவு 377 இயற்கைக்கு மாறான குற்றங்கள் எனும் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.

போக்சோ சட்டத்தின் பொது அம்சங்கள்:

18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்,வன்முறை, பாலியல் துன்புறுத்தல், சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது. இசட்டத்தில் கீழ் 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடியவேண்டும்.  இசட்டத்தில் குற்றம் புரிந்த குற்றவாளிகளுக்கு சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங்காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம், சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு. உதாரணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக் குரியவர்கள். அவர்களே குற்றம் இழைக்கும் போது, அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது.

மாவட்ட அளவில் குழந்தை பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். தனி காவல்துறை பிரிவும் ஏற்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தை எங்கு இருந்தால், அக்குழந்தையின் நலனுக்கு உகந்தது என்று பார்க்க வேண்டும். சில சமயம், குடும்ப உறுப்பினர்களே குற்றம் செய்பவராக இருந்தால், அங்கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget