சாதி மாறி திருமணம் நடந்ததால், இப்படி ஒரு கொடுமை பண்றீங்களா? கோவில் கலைஞர்..
பணிக்கர், என் மகன் முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்ததற்கு எனக்கு பூரக்காலி நடனம் ஆடத் தடை விதித்துள்ளனர்.
தன் மகன் முஸ்லிம் பெண்ணை மணந்ததால், பூரம் திருவிழாவையொட்டி நடக்கும் பாரம்பரிய நடனம் ஆட, தந்தைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது சர்ச்சையுள்ளது.
இருமணம் இணையும் திருமணத்தால் ஏற்பட்ட பரபரப்பு. கேளராவில் கலப்பு மணம் புரிந்து கொண்டதால் திருவிழாவில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டிருப்பது வேதனையானது. கேரளாவில், உள்ள கண்ணுார் மாவட்டத்தில், பிரபலமான கரிவெல்லுார் கணியன் பரம்பத் பகவதி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் பூரம் திருவிழாவை முன்னிட்டு, 'பூரக்காலி' எனும் பாரம்பரிய கலை நடன நிகழ்ச்சி நடப்பது வழக்கம்.
இந்நிலையில், வினோத் பணிக்கர் என்பவர், 37 ஆண்டுகளாக பூரக்காலி நடனம் ஆடி வருகிறார். அப்படியிருக்க, வினோத் பணிக்கரின் மகன், ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதன் காரணமாக, இந்தாண்டு பூரம் திருவிழாவில், பூரக்காலி நடனம் ஆட, வினோத் பணிக்கருக்கு கோவில் நிர்வாகம் தடை விதித்தது.
இது குறித்து, வினோத் பணிக்கர் கூறியதாவது என் மகன் முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்ததற்கு எனக்கு பூரக்காலி நடனம் ஆடத் தடை விதித்துள்ளனர். மகன், மருமகளுடன் கூட்டுக் குடும்பமாக வசிக்கிறேன். அவர்களை விட்டு, தனியே வந்து அருகில் உள்ள என் தாய் வீட்டில் வசித்தால், பூரக்காலி நடனம் ஆட அனுமதிப்போம் என்கின்றனர். அதற்கு மறுத்து விட்டேன். பூரக்காலி நடனம் என் உயிர் மூச்சு. நான் அந்நடனத்தை ஆட தடை செய்தது சரியல்ல.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க..
Velmurugan Speech: தமிழ்நாட்டு வேலை தமிழருக்கு! போராட்டத்தில் குதித்த வேல்முருகன்!
NaMo App Scam: பாஜகவின் NaMo செயலியில் மோசடி! RTI யில் பகீர்!
Madurai Special Burma Idiyappam: மதுரை மல்லி தெரியும்... இடியாப்பக் கடை தெரியுமா?
Tale of Seeraga Samba : சீரக சம்பா அரிசியில இவ்ளோ நன்மைகளா? இதோட கதை உங்களுக்குத் தெரியுமா?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்