Lok Sabha Bill: 700க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.. மக்களவை வெளியிட்ட பகீர் தகவல்..
மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த 713 மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொந்த பலத்தில் தனி நபர் மசோதாக்கள் செய்ய முடியும். இப்படி நிறைவேற்றப்பட்டு வரும் மசோதாக்கள் அவ்வப்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு சில மசோதாக்கள் நிலுவையில் உள்ளது.
அந்த வகையில் 700-க்கும் மேற்பட்ட தனியார் உறுப்பினர்களின் மசோதாக்கள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு சில மசோதாக்கள் தண்டனை விதிகள் மற்றும் தேர்தல் சட்டங்களைத் திருத்துவது தொடர்பாக உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தற்போதைய மக்களவை உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது, ஜூன் 2019 இல் இந்த மசோதாக்களில் பல தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், சில மசோதாக்கள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் போது தாக்கல் செய்யப்பட்டதாக மக்களவை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை வெளியிட்ட செய்தி குறிப்பில் இது போன்று சுமார் 713 மசோதாக்கள் நிலுவையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மசோதாக்கள் பொது சிவில் சட்டம், பாலின சமத்துவம், பருவநிலை மாற்றம், விவசாயம், தற்போதுள்ள குற்றவியல் மற்றும் தேர்தல் சட்டங்களில் திருத்தம் மற்றும் அரசியலமைப்பு விதிகளை மாற்றியமைத்தல் போன்ற அம்சங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.