மேலும் அறிய

Supreme Court : ”எங்களுக்கு வேற வேலை இல்லையா?”: பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக்கோரிய மனுவில் உச்சநீதிமன்றம் காட்டம்

மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தற்போது நீதிமன்றம் மறுத்துள்ளது

நாட்டில் பசுவைச் சுற்றி நிகழும் மதவாத அரசியல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது என்னும் கருத்து சிலரால் முன்வைக்கப்படும் நிலை தொடர்கிறது. இதற்கிடையே அண்மையில் பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. பசுவை தேசிய விலங்காக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, கோவன்ஷ் சேவா சதன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த பொதுநல மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

 அதை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தற்போது நீதிமன்றம் மறுத்துள்ளது. திங்கள் அன்று இதுகுறித்து விசாரித்த உச்சநீதிமன்றம் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரும் மனுவை நிராகரித்துவிட்டது. மனுவின் மீது கேள்விகள் எழுப்பிய நீதிபதிகள் எஸ் கே கவுல் மற்றும் அபய் எஸ் ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு மனுதாரரிடம் அப்படி அறிவிக்காததால் என்ன அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டுவிட்டது? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

Supreme Court : ”எங்களுக்கு வேற வேலை இல்லையா?”: பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக்கோரிய மனுவில் உச்சநீதிமன்றம் காட்டம்
மேலும் "இதை விசாரிப்பதுதான் நீதிமன்றத்தின் வேலையா? நீதிமன்றத்துக்கு இதன் காரணமாக ஆகும் செலவுகளை உணர்ந்தும் நீங்கள் ஏன் இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்கிறீர்கள்? இதைச் செய்யாததால் அப்படி எந்த அடிப்படை உரிமை மீறப்படுகிறது? நீங்கள் நீதிமன்றத்திற்கு வந்திருப்பதால் நாங்கள் சட்டத்தை காற்றில் பறக்கவிட வேண்டுமா?” என அடுக்கடுகாக கேள்விக்கணைகளை வீசியுள்ளது.

இதற்கு விளக்கமளித்த மனுதாரர் தரப்பு பசு பாதுகாப்பு மிகவும் முக்கியமானது  என நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. இதற்கு நீதிபதிகள் அமர்வு எச்சரிக்கை விடுத்த நிலையில், மனுதாரர் தான் மனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார், மேலும் இந்த வழக்கு திரும்பப் பெறப்பட்டதாகச் சொல்லித் தள்ளுபடி செய்யப்பட்டது.

தேசிய விலங்காக அறிவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட பசுமாட்டின் சாணம் முதல் சிறுநீர் வரை அனைத்தையும் மக்களில் சிலர் தங்கள் உடல்நலனைப் பாதுகாத்துக்கொள்ள மருத்துவரீதியாக நன்மை என நினைத்து பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவற்றில் பல மூட நம்பிக்கைகளும் பொதிந்து இருப்பதாக கூறப்படுகிறது.

பசும்பால் சார்ந்த பொருட்கள் இல்லாமல் மக்களால் ஒரு நாளை கடந்து செல்ல முடியாது. டீ, காபி, பால், வெண்ணெய் மற்றும் நெய் என ஏதாவது ஒரு வகையில் பால் சார்ந்த பொருட்கள் மக்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்து இருக்கிறது

அந்த வகையில் வெண்ணெய் மற்றும் நெய்யினால் கிடைக்கக்கூடிய ஆகச்சிறந்த நன்மைகளை  காண்போம். செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் எண்ணெய்க்கு பதிலாக நெய்யை சேர்த்தால், செரிமான பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

நெய்யானது வெள்ளை நிறத்திலிருந்து இளம் மஞ்சள் நிறம் வரையிலும் அதன் தன்மைக்கு ஏற்ப காணப்படுகிறது. நெய்யில் 8%  எளிதாக ஜீரணமாக கூடிய கொழுப்பு அமிலங்கள் இருக்கிறது. இவ்வமிலங்கள் உண்ணத்தக்க கொழுப்புகள் ஆகும்.  நெய் மற்றும் மீன் எண்ணெயை தவிர பிற தாவர எண்ணெய்கள் எதிலும் இத்தகைய கொழுப்புகள் இல்லை. நெய் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் - ஏ, பி12, டி, ஈ மற்றும் கே மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், உடலுக்கு பல நன்மைகளை தருகிறது.

அதுமட்டுமல்லாமல் நன்கு சுத்தமான பசும் நெய்யை தொடர்ந்து உட்கொண்டால் ,உடல் சூடு தணிந்து குடல் நோய்கள், கண் எரிச்­சல்,  தோல் வறட்சி, முடி உதிர்­தல்   போன்ற பிரச்­சி­னை­கள் படிப்­ப­டி­யா­கச் சரி­யா­கி­வி­டும் என கூறப்படுகிறது. உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அதிலும் வளரும் குழந்தைகளுக்கு நெய்யை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, அவர்கள் நோய்வாய்ப்படாமல் இருப்பார்கள்.

செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் எண்ணெய்க்கு பதிலாக நெய்யை சேர்த்தால், செரிமான பிரச்சனையில் இருந்து விடுபடலாம்

உடலுக்கு உள்ளே மட்டுமல்லாமல் உடலுக்கு வெளியே  தோலில் ஏற்படும் பல பிரச்சினைகளை சரி செய்வதோடு, பால் பொருட்கள் அழகு சாதன பொருளாகவும் பயன்படுகிறது. சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் மாற்றுகிறது. இயற்கையான பிரகாசத்தை தோலுக்கு அளிக்கிறது எனவும் கருதப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ”  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ” தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Jhon Arokiasamy : விஜயின் அரசியல் ஆலோசகர் தவெக-வின் MASTER THE BLASTER  ஜான் ஆரோக்கியசாமி யார்?ADMK TVK Alliance : அதிமுகவுடன் டீல் பேசும் விஜய்?துணை முதல்வர் பதவி..80 சீட் புரட்டி போடும் கூட்டணிKasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ”  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ” தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Nayanthara:
Nayanthara: "மிருகங்கள் மீதான போர்" போஸ்டரிலே தனுஷை தாக்குகிறாரா நயன்தாரா?
Embed widget