(Source: ECI/ABP News/ABP Majha)
IRCTC Tour Package: மலிவு விலையில் 5 ஜோதி லிங்க கோயில்களை தரிசிக்க வாய்ப்பு - ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்
IRCTC Tour Package: ஜோதி லிங்க கோயில்களை தரிசிப்பதற்கான மலிவு விலை சுற்றுலா பயண திட்டத்தை, இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
IRCTC Tour Package: இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றுலா பயண திட்டத்திற்கான, முழு விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
IRCTC டூர் பேக்கேஜ்:
இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC), ஷீரடி சாய்பாபா மற்றும் 5 ஜோதி லிங்கங்களை தரிசிக்க மலிவு விலையில் ஒரு பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொகுப்பில், பாரத் கௌரவ் டூரிஸ்ட் ரயிலில் பயணிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணமானது 10 இரவுகள் மற்றும் 11 நாட்கள் நீடிக்கும்.
இந்தப் பயணம் 24 ஆகஸ்ட் 2024 அன்று பீகாரில் உள்ள பெட்டியாவிலிருந்து தொடங்கி, 3 செப்டம்பர் 2024 அன்று பெட்டியாவுக்குத் திரும்பும். பெட்டியா ரயில் நிலையத்தைத் தவிர, சகௌலி, ரக்சால், சிதாமர்ஹி, தர்பங்கா, சமஸ்திபூர், முசாபர்பூர், ஹாஜிபூர், பாட்லிபுத்ரா, ஆரா, பக்சர், தில்தர்நகர் மற்றும் தீன் தயாள் உபாத்யாய் ஆகிய ரயில் நிலையங்களிலும் முன்பதிவு செய்த பயணிகள் ஏறலாம்/இறங்கலாம். ,
டூர் பேக்கேஜின் சிறப்பம்சங்கள்
பேக்கேஜின் பெயர்- பாரத் கௌரவ் ஷிர்டி & ஜோதிர்லிங்க யாத்ரா எக்ஸ் பெட்டியா (EZBG17)
சுற்றுப்பயண காலம்- 11 நாட்கள்/10 இரவுகள்
பயண முறை- பாரத் கௌரவ் சுற்றுலா ரயில்
உணவுத் திட்டம்- காலை தேநீர், காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு
புறப்படும் தேதி- ஆகஸ்ட் 24, 2024
இருக்கைகளின் எண் - 780 (ஸ்லீப்பரில் 660 மற்றும் மூன்றாம் ஏசியில் 120)
பயணத்தில் காணக்கூடிய இடங்கள்:
உஜ்ஜைன்: ஓம்காரேஷ்வர் ஜோதிலிங்கம், மஹாகாலேஷ்வர் ஜோதிலிங்கம்
சோம்நாத்: சோம்நாத் ஜோதிலிங்கம்
துவாரகா: துவாரகாதீஷ் கோயில் மற்றும் நாகேஷ்வர் ஜோதிலிங்கம்
ஷிர்டி: சாய் தரிசனம், ஷானி ஷிங்னாபூர் கோயில்
நாசிக்: திரிம்பகேஷ்வர் ஜோதிரலிங்கம்
Get ready for the awe-inspiring spectacles of the sacred Jyotirlingas and Shirdi Dham with the IRCTC Bharat Gaurav Tourist Train.
— IRCTC Bharat Gaurav Tourist Train (@IR_BharatGaurav) July 12, 2024
Book your spot here 👉https://t.co/VoLjE82HQJ#DekhoApnaDesh #IndiaTourism #DivineJourney #SpiritualTour #HolyPilgrimage #PilgrimageTour pic.twitter.com/pCXlE5XEXV
கட்டண விவரங்கள் என்ன?
நீங்கள் எகானமி வகுப்பில் பயணம் செய்தால் 20 ஆயிரத்து 899 ரூபாய் செலுத்த வேண்டும். ஸ்டாண்டர்டு கேடகரி பேக்கேஜை எடுத்துக் கொண்டால், தனி நபருக்கு 35 ஆயிரத்து 795 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த கட்டணமானது பயணத்திற்கான ரயில், பேருந்து, தங்குமிடம், உணவு மற்றும் காப்பீடு ஆகியவற்றிற்கன கட்டணங்களையும் உள்ளடக்கியது ஆகும்.
கோயில் தரிசனம் மற்றும் நினைவுச்சின்னங்களைப் பார்ப்பதற்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயம். சுற்றுப்பயணத்தின் போது அனைத்து பயணிகளும் தடுப்பூசி சான்றிதழை ஹார்ட் காபி அல்லது தொலைபேசியிலோ சாஃப்ட் காபியாக வைத்து இருக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களை அறியகூடுதல் விவரங்களை அறிய https://www.irctctourism.com/pacakage_description?packageCode=EZBG17