Farmers: வங்கி கணக்கில் நாளை வரப்போகுது ரூ.4,000.! குஷியில் துள்ளி குதிக்கும் விவசாயிகள்
விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வரும் நிலையில், நாளை விவசாயிகளின் வங்கி கணக்கில் 2ஆயிரம் முதல் 4ஆயிரம் ரூபாய் வரை பணம் வரவுவைக்கப்படவுள்ளது.

விவசாயத்திற்கான திட்டங்கள்
விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மானிய உதவி திட்டம், குறைந்த வட்டியில் கடன் உதவி திட்டம், இயற்கை பேரிடரில் இருந்து விவசாயிகளை மீட்க காப்பீட்டு திட்டம் என பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு மொத்தம் 6,000 ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் இந்த தொகையானது 3 தவனையாக ரூ.2,000 வீதம் வங்கியில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 10 கோடி விவசாயிகள் பயனடைகின்றனர்.
விவசாயிகளை ஊக்குவிக்க உதவித்தொகை
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரையில் 20 தவணைகள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், 21ஆவது தவணை எப்போது வரும் என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர். ஏற்கனவே, இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட ஹரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் செப்டம்பர் 24ஆம் தேதியே இந்தத் தவணையைப் பெற்றுவிட்டனர். இதனையடுத்து மற்ற மாநில விவசாயிகளுக்கு தவனை தொகையானது வழங்கப்படவுள்ளது. இந்த ஆண்டு சரிபார்ப்பு செயல்முறை கடுமையாக மாற்றப்பட்டதையடுத்து ஏராளமான விவசாயிகள் பெயர்கள் விடுவிக்கப்பட்டது. விவசாயிகள் பெயர்கள் தவறுதலாக பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து மீண்டும் சேர்க்கும் பணியானது நடைபெற்று முடிவடைந்துள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு eKYC, ஆதார்–வங்கிக் கணக்கு இணைப்பு போன்றவை கடுமையாக கண்காணிக்கப்பட்டது.
இந்த தகவல்களில் ஏதேனும் தவறு இருந்தால் பயணாளிகள் பெயர் நீக்கப்பட்டது. இதனையடுத்து திருத்தங்கள் செய்யப்பட்டவுடன் விவசாயிகள் பெயர்கள் சேர்க்கப்பட்டு வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என மத்திய அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே நீக்கப்பட்ட விவசாயிகளின் பெயர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டு கடந்த தவணையுடன் சேர்த்து ரூ.4,000 வரை வங்கி கணக்கில் மத்திய அரசு செலுத்தவுள்ளது. நவம்பர் 19ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இந்தப் பணம் வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பிஎம் கிசான் நிதி
இதனிடையே பிஎம் கிசான் நிதியை பெற விவசாயிகள் தங்கள் பெயர் உள்ளதா.? அல்லது நீக்கப்பட்டுள்ளதா.? என்பதை தெரிந்து கொள்ளலாம். அதன் படி PM-KISAN இணையதளத்தில் சென்று, ‘விவசாயிகளின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ளுங்கள்’ என்ற விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும், அடுத்தாக ஆதார் எண், மொபைல் எண் அல்லது பதிவுக்கான ஐடி உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும்.
அதன் மூலம் விவசாயிகளுக்கு தவணை அங்கீகரிக்கப்பட்டதா, நிலுவையில் உள்ளதா.? அல்லது நிராகரிக்கப்பட்டதா.? என்பதை தெரிந்து கொள்ளலாம். பட்டியல் பெயர் இல்லாவிட்டால், அருகிலுள்ள CSC மையத்தில் அல்லது வேளாண்மை அலுவலக விவரங்களைப் புதுப்பித்து தங்களது பெயர்களை இணைத்துக்கொள்ளலாம்.




















