Sheena Bora Case: | ''என் பொண்ணு சாகவே இல்லை'' - பெரிய ட்விஸ்ட் வைத்த இந்திராணி.. குழப்பத்தில் போலீசார்!!
எனது மகள் ஷீனா போரா இன்னும் இறக்கவில்லை என்றும் அவர் காஷ்மீரில் இருப்பதாகவும் பெரிய அதிர்ச்சியை இந்திராணி முகர்ஜி தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன?
இந்திராணி முகர்ஜி மற்றும் சித்தார்த் தாஸின் மகள் தான் ஷீனா போரா. இந்திராணியின் 3-வது கணவர் பீட்டர். பீட்டரின் மகன் ராகுல் முகர்ஜி. இந்த நிலையில் இந்திராணியின் மகள் ஷீனாவும், பீட்டரின் மகன் ராகுலும் காதலித்து வந்துள்ளனர். முறைப்படி பார்த்தால் அவர்கள் அண்ணன், தங்கை. இதனால் இந்தக்காதல் அவர் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. ஷீனாவை இந்திராணி முகர்ஜி கடுமையாக எதிர்த்துள்ளார்.
ஆனால் அவர் பேச்சுக்கு ஷீனா காதுகொடுக்கவில்லை. அந்த நேரத்தில் 2012ம் ஆண்டு ஏப்ரலில் ஷீனா காணாமல் போனார். இந்திராணிதான் ஷீனாவை கொன்றுவிட்டதாக கூறப்பட்டது. போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி விசாரணையை தொடங்கிய போலீசார் இந்திராணியை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த இந்திராணியின் இரண்டாவது கணவர், கார் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருக்கும் போதே இந்திராணி, பீட்டரை விவகாரத்து செய்தார். அவர்களது 17 வருட திருமண வாழ்க்கை 2019ல் முடிவுக்கு வந்தது. 2020ம் ஆண்டு பீட்டர் ஜாமினில் வெளியானார்.
Watch Video: சிங்க முக மாஸ்க்! ஒல்லி உடல்! வேலூர் நகைக்கடை கொள்ளையின் சிசிடிவி வீடியோ..
தற்போது அதிர்ச்சி:
பரபரப்பாய் தொடங்கி அமைதியாய் போன இந்த விவகாரத்தில் தற்போது மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. தன் மகள் இறக்கவே இல்லை என தெரிவித்துள்ளார் இந்திராணி. இது என்ன புதுக்கதை என தலையை பிய்த்துக்கொள்ளத் தொடங்கியுள்ளது காவல்துறை. சிபிஐக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் இந்திராணி.
அதில் நான் ஒரு பெண் கைதியை சந்தித்தேன். அவர் தன் மகளான ஷீனாவை காஷ்மீரில் சந்தித்தேன் எனத் தெரிவித்தார். இது குறித்து விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்த விவகாரம் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்திராணி பொய் சொல்கிறாரா? அல்லது அவர் சொல்வது போல ட்விஸ்ட் ஏதும் இருக்கிறதா என போலீசார் தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர். இது குறித்து இந்திராணியின் வழக்கறிஞர் தரப்பு விளக்கம் ஏதும் கொடுக்கவில்லை.
முந்திரி லாரியை கடத்திய அதிமுக முன்னாள் மந்திரி மகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்