Watch Video: சிங்க முக மாஸ்க்! ஒல்லி உடல்! வேலூர் நகைக்கடை கொள்ளையின் சிசிடிவி வீடியோ..
Vellore Jos Alukkas Theft: வேலூர் நகைக்கடை கொள்ளை தொடர்பான சிசிடிவி காட்சி இன்று வெளியானது.
வேலூர் தோட்டப்பாளையம் தர்மராஜா கோவில் தெருவில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடையில் துளை போட்டு 30 கிலோ தங்க நகைகள் மற்றும் வைரம் கொள்ளையடிக்கப்பட்டது. கடையின் பின் பக்க வெண்டிலேட்டர் குழாய் மூலம் புகுந்து பால் சீலிங்கை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் குறித்த தடயங்களை மோப்ப நாய் மற்றும் கைரேகை நிருணர் குழுவினர் உதவியுடன் சேகரித்து வருகின்றனர்.
சம்பவ இடத்தில் வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு, எஸ்.பி ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் வேலூர் மாநகர் பகுதிகளில் உள்ள விடுதிகளில் காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
நகரின் முக்கிய சாலைகளில் உள்ள சிசிடிவி கேமிராக்களையும் ஆய்வு செய்தனர். கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற திசை குறித்து அறிய வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் சிம்பா கடையின் பின்புறம் இருந்து கால்வாய் வழியாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று வேலூர் பழைய பஸ்சாலையில் நின்றது. இந்நிலையில் நகைக்கடை கொள்ளை தொடர்பான சிசிடிவி காட்சி இன்று வெளியானது. சிங்கம் முகம் போன்ற மாஸ்க் அணிந்துகொண்டு கடைக்குள்ளே வரும் நபர் சிசிடிவி கேமராவில் பெயிண்ட் ஸ்பிரே அடிக்கிறார். அது மற்றொரு கேமராவில் பதிவாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.