Watch Video : நடுரோட்டில் இளம்பெண்ணை சரமாரியாக அடித்து உதைத்த 4 பெண்கள்..! குடித்துவிட்டு அட்டகாசமா..?
மத்திய பிரதேசத்தில் நடு ரோட்டில் நான்கு பெண்கள் சேர்ந்து ஒரு பெண்ணைத் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேசத்தில் உள்ளது இந்தூர். இந்த நிலையில், மிகவும் பரப்பான இந்தூர் நகரத்தின் சாலையில் இரவு நேரத்தில் மூன்று பெண்கள் சேர்ந்து மற்றொரு இளம்பெண்ணை சரமாரியாக தாக்குகின்றனர். அப்போது, மற்றொரு பெண்ணும் அந்த மூன்று பெண்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை சரமாரியாக தாக்குகிறார். மேலும், அடிவாங்கும் இளம்பெண்ணின் செல்போனையும் தரையில் போட்டு உடைக்கிறார்.
நான்கு பெண்களும் சேர்ந்து அந்த பெண்ணை சாலையின் கீழே தள்ளி சரமாரியாக தாக்குகின்றனர். இதை சுற்றி நின்றும் பலரும் வேடிக்கை பார்க்கின்றனர். இதைப்பார்க்கும் யாரும் அந்த பெண்ணை காப்பாற்றவும் முயற்சிக்கவில்லை. இளம்பெண்ணை தாக்கிய மற்ற பெண்களை தடுக்கவும் முயற்சிக்கவில்லை.
उड़ता इंदौर.. नशे में धुत्त लड़कियों का पब के बाहर मारपीट का वायरल वीडियो @NCMIndiaa @DeepikaBhardwaj @voiceformenhind pic.twitter.com/ZXt8Q8OzaP
— सत्यनिष्ठा (@esp_india) November 7, 2022
இந்த சம்பவம் முழுவதையும் அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு பெண்ணை தாக்கிய அந்த நான்கு பெண்களும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த புகாரும் பெறப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போக்குவரத்து மிகுந்த சாலையில் இரவு நேரத்தில் ஒரு பெண்ணை நான்கு பெண்கள் இணைந்து தாக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : Pocso : போக்சோ விழிப்புணர்வு தேவை: சிறார் இடையேயான பாலியல் உறவு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து
மேலும் படிக்க : Procreation : குழந்தையை பெற்றுக்கொள்ளவும், பெறாமல் இருக்கவும் பெண்களுக்கு உரிமை இருக்கிறதா? கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு கருத்து..