Indigo : “கார்ப்பரேட் வாடிக்கையாளருக்கு ஃபர்ஸ்ட்.. குழந்தைக்கு அப்புறமாதான்” : இண்டிகோ விமான ஊழியர்கள் செய்தது என்ன?
பலமுறை கோரிக்கை விடுத்த பிறகு , கார்ப்பரேட் வாடிக்கையாளருக்குதான் முதலில் சேவை செய்ய வேண்டும். என கேபின் குழு கூறியதாகவும் , இறுதி வரைக்கும் அழுத தனது மகளுக்கு உணவு தரவே இல்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
பிரபல இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் , தனது 6 வயது மகளுக்கு விமான ஊழியர்கள் உணவு தரவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
”அழுத குழந்தைக்கு சாப்பாடு தரலைங்க “
டாக்டர் OBGYN என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இண்டிகோ விமானத்தில் பயணம் செய்திருக்கிறார். அப்போது அவர் உடன் அழைத்துச்சென்ற 6 வயது மகளுக்கு பசி ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் அழ தொடங்கியிருக்கிறார். உடனே விமான ஊழியர்களிடம் , தனது குழந்தைக்கு பசிக்கிறது ஏதேனும் உணவு இருந்தால் கொடுங்கள் , அதற்கான விலையை நான் செலுத்தி விடுகிறேன் என கூறியிருக்கிறார். பலமுறை கோரிக்கை விடுத்த பிறகு , கார்ப்பரேட் வாடிக்கையாளருக்குதான் முதலில் சேவை செய்ய வேண்டும். என கேபின் குழு கூறியதாகவும் , இறுதி வரைக்கும் அழுத தனது மகளுக்கு உணவு தரவே இல்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
The great @IndiGo6E experience :
— Dr. OBGYN (@drnngujarathi) June 19, 2022
My 6yo kid was #hungry. Requested cabin crew to give her any food available, willing to pay for it. On repeated requests also they #refused saying they will serve corporate clients first. She kept crying whole flight😡but they didn’t serve
மன்னிப்பு கோரிய இண்டிகோ :
OBGYN செய்த ட்வீட் வைரலானதை தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் இந்த சம்பவம் தொடர்பாக பதிலளித்தது. அதில் “ நீங்கள் சந்தித்த பிரச்சனையை எங்களால் புரிந்துக்கொள்ள முடிகிறது. உங்களது குழந்தை தற்போது நலமாக இருப்பார் என நம்புகிறோம்.நாங்கள் இது தொடர்பாக சரிபார்த்து, நாளை உங்களின் பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு தொடர்புக்கொள்கிறோம் “ என தெரிவித்திருந்தது.
Sir, we understand what you must have gone through. Hope she is fine now. We'll certainly look into it and will connect with you tomorrow during working hrs at your registered number. ~Snigdha https://t.co/xcJPAifuBc
— IndiGo (@IndiGo6E) June 19, 2022
எதிர்வினைகள் :
OBGYN செய்த ட்வீட்டிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வந்தாலும் சிலர் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள்தான் முன் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். டிக்கெட் புக் செய்யும் பொழுதே உணவினையும் சேர்த்து ஆடர் செய்திருக்கலாம் . அல்லது குழந்தைக்கு தேவையான திண்பண்டங்களை நீங்கள் கையில் எடுத்து வந்திருக்க வேண்டும் என எதிர்வினையாற்றி வருகின்றனர்.
Surprised. Indigo is wrong. What are you as a parent. You had many options. pre book with airline. Carry some biscuits for your own child. We always do that. My child is my responsibility not of the whole world
— g naveen chandra rao (@CoolGNaveen) June 19, 2022
முன்னதாக இதே போன்றதொரு சம்பவத்தில் இண்டிகோ நிறுவனத்திற்கு DGCA 5 லட்சம் அபராதம் வழங்கப்பட்டது. சிறப்பு உதவி பெறும் டீன் ஏஜர் ஒருவரை இண்டிகோ விமானத்தில் ஏற்ற ஊழியர்கள் மறுத்த விவகாரம் பூதாகரமானது . இது DGCA பார்வைக்கு வந்த பிறகு , சம்பந்தப்பட்ட ஊழியர் மன்னிப்பு கேட்டார். மேலும் தலைமை நிர்வாக அதிகார அந்த குழந்தைக்கு சர்க்கர நாற்காலி வழங்கவும் முன்வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.