Indian Citizenship: 10 மாதத்தில் 1.8 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்தார்களா? 8,441 பேர் வெளிநாட்டு சிறையில்... அதிர்ச்சி தகவல்கள்..
2022 ஆம் ஆண்டின், 10 மாதத்தில் 1.86 லட்சம் மக்கள் இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாட்டு குடியுரிமையை பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரரிவித்தார்.
பாராளுமன்ற குளிர்கால கூட்ட தொடரில், மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன், குடியுரிமையை துறந்தவர்கள் பட்டியல் குறித்து தெரிவித்துள்ளார்.
கேள்வி:
2015 ஆம் ஆண்டு முதல் இந்திய குடியுரிமையை துறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை, காங்கிரஸ் உறுப்பினர் அப்துல் கலீக் கேள்வி எழுப்பினார்.
பதில்:
அதற்கு, இணையமைச்சர் முரளிதரன் பதிலளித்து தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில், 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாதத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்களது குடியுரிமையை துறந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளிதரன் மக்களவையில் தெரிவித்தார்.
மேலும், 2015 ஆம் ஆண்டில் 1,31,489 பேரும், 2016 ஆம் ஆண்டில் 1,41,603 பேரும், 2017 ஆம் ஆண்டில் 1,33,049 பேரும், 2018 ஆம் ஆண்டில் 1,34,561 பேரும், 2019 ஆம் ஆண்டில் 1,44,017 பேரும், 2020 ஆம் ஆண்டில் 85,256 பேரும், 2021 ஆம் ஆண்டில் 1,63,370 பேரும், 2022 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை 1,83,741 பேரும் தங்களது இந்திய குடியுரிமையை விட்டுக் கொடுத்ததாக முரளிதரன் மக்களவையில் தெரிவித்தார்.
Watch: MoS V. Muraleedharan's reply during #QuestionHour in #LokSabha on questions regarding #PassportMela.@VMBJP @MOS_MEA @MEAIndia #WinterSession2022 pic.twitter.com/3N47rEOVu0
— SansadTV (@sansad_tv) December 9, 2022
இதையடுத்து, 3.2 கோடி இந்தியர்கள் அல்லது இந்திய வம்சாவளியினர் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள் என்றும், அவர்கள் அனைவருக்கும் வெளியுறவு அமைச்சகம் சேவைகளை வழங்கி வருகிறது.
குடியுரிமையை துறக்கப்பட்டவர்களால் "இந்தியாவிலிருந்து சென்ற பணம்" குறித்து அமைச்சகம் கண்காணிப்பதில்லை. 2014 ஆம் ஆண்டில் மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாட்டில் பாஸ்போர்ட் சேவைகள் "500 சதவீதம்" மேம்பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்திய குடியுரிமை பெற்றவர்கள்:
பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் குடிமக்களை தவிர, இந்திய குடியுரிமை பெற்ற வெளிநாட்டினரின் எண்ணிக்கையானது 2015 இல் 93 ஆகவும், 2016 இல் 153 ஆகவும், 2017 இல் 175 ஆகவும், 2018 இல் 129 ஆகவும், 2019 இல் 113 ஆகவும், 2020 இல் 27 ஆகவும், 2021 இல் 42 ஆகவும் மற்றும் 2022 இல் அக்டோபர் வரை 60 ஆகவும் உள்ளதாகவும் உள்ளது.
2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை 1 லட்சத்து 83 ஆயிரத்து 741 பேரும் இந்திய குடியுரிமையை பெற்றுள்ளனர் என்றும், அதே கால அளவில் பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் குடிமக்களை தவிர 60 வெளிநாட்டினர் இந்திய குடியுரிமையை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு சிறையில்:
மேலும் 8,441 இந்தியர்கள் தற்போது வெளிநாட்டு சிறைகளில் உள்ளனர் என்றார். இவர்களில் 4,389 பேர் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.