பயணிகளுக்கு ஷாக்.. அதிரடியாக உயர்ந்த ரயில் கட்டணம்! கி.மீ-க்கு எவ்வளவு உயர்வு?
ஜூலை 1 ஆம் தேதி முதல் விரைவு ரயில்களின் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தப்படும் என இந்திய ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது.

பயணிகள் ரயில் கட்டணம் நாளை முதல் உயர்வதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ரயில் கட்டண உயர்வு:
ஜூலை 1 ஆம் தேதி முதல் விரைவு ரயில்களின் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தப்படும் என இந்திய ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, ஏசி அல்லாத விரைவு ரயில்களில் ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசா வீதம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கட்டண உயர்வு எவ்வளவு?
ஏசி அல்லாத மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான கட்டணம் கி.மீ.க்கு ₹0.01 அதிகரிக்கும், ஏசி வகுப்பு ரயில்களுக்கு, கி.மீ.க்கு ₹0.02 அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 500 கி.மீ வரையிலான இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும், 500 கி.மீ.க்கு மேல் செல்லும் பயணங்களுக்கு, கி.மீ.க்கு ₹0.005 வரை கட்டண உயர்வு இருக்கும்.
கி.மீ கணக்கில் உயர்வு எவ்வளவு?
-
இரண்டாம் வகுப்பு சாதாரணம்:
-
500 கிமீ வரை கட்டண உயர்வு இல்லை
-
501 கிமீ முதல் 1500 கிமீ வரை ரூ.5 உயர்வு
-
1501 கிமீ முதல் 2500 கிமீ வரை ரூ.10 உயர்வு
-
2501 கிமீ முதல் 3000 கிமீ வரை ரூ.15 உயர்வு
-
-
ஸ்லீப்பர் வகுப்பு சாதாரணம்: அரை பைசா கட்டண உயர்வு
-
ஃபர்ஸ்ட் கிளாஸ் சாதாரணம்: அரை பைசா கட்டண உயர்வு
மெயில்/எக்ஸ்பிரஸ் Non-AC சேவைகள்:
-
இரண்டாம் வகுப்பு: 1 பைசா கட்டண உயர்வு
-
ஸ்லீப்பர் வகுப்பு: 1 பைசா கட்டண உயர்வு
-
ஃபர்ஸ்ட் கிளாஸ்: 1 பைசா கட்டண உயர்வு
ஏசி வகுப்புகள்:
-
ஏசி சேர்கார்: 2 பைசா கட்டண உயர்வு
-
ஏசி 3-டயர்/3E: 2 பைசா கட்டண உயர்வு
-
ஏசி 2-டயர்: 2 பைசா கட்டண உயர்வு
-
ஏசி ஃபர்ஸ்ட் கிளாஸ்/EC/EA: 2 பைசா கட்டண உயர்வு
முக்கிய சேவைகளில் மாற்றம் இல்லை
மேலும் தேஜஸ், ராஜ்தானி, ஷதாப்தி, துரோண்டோ, வந்தே பாரத், ஹம்சஃபார், அமிர்த் பாரத், மஹாமானா, கதிமான், அந்த்யோதயா, கரீப் ரத், ஜன்-சதாப்தி, யுவா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட முக்கிய ரயில்களின் கட்டணங்களில் எந்த வித மாற்றங்களும் செய்யப்படவில்லை.அதேபோல, அனுபூதி கோச்சுகள் மற்றும் ஏசி விஸ்டாடோம் கோச்சுகளின் கட்டணமும் புதுப்பிக்கப்பட்ட கட்டண அட்டவணையின் படி மாற்றப்பட்டுள்ளது.
Govt has decided to raise the railway fares beginning tomorrow.
— Rishikesh Kumar (@rishhikesh) June 30, 2025
Fare to be increased in all the AC classes and sleeper coaches. pic.twitter.com/TQkVxbMyLm
கூடுதல் கட்டணங்களில் மாற்றம் கிடையாது
ரிசர்வேஷன் கட்டணம், சூப்பர்பாஸ்ட் சர்ச்சார்ஜ் உள்ளிட்ட கூடுதல் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணங்கள் தொடரும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகள் (MSTs) மற்றும் புறநகர் ரயில் கட்டணங்களில் எந்த மாற்றமும் இருக்காது. இந்த கட்டண உயர்வானது நாளை முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






















