மேலும் அறிய

இந்திய மருந்தை பயன்படுத்தியதால் விபரீதம்? சிகிச்சை பெற்று வந்தவர் மர்ம மரணம்...காம்பியாவை தொடர்ந்து இலங்கையில் அதிர்ச்சி..!

கர்ப்பிணி பெண் ஒருவருக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மயக்க மருந்து கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக தகவல் வெளியானது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் தரமற்று இருப்பதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. சமீபத்தில், மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவிலும் உஸ்பெக்கிஸ்தானிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்தை உட்கொண்டதால் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இலங்கையில் அதிர்ச்சி:

இந்நிலையில், அதன் தொடர்ச்சியாக, இலங்கையில் நடந்துள்ள சம்பவம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கண்டி மாவட்டத்தில் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு இந்தியாவில்  தயாரிக்கப்பட்ட புபிவாக்கைன் என்ற மயக்க மருந்தை செலுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, அவர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தச் செய்தி உள்ளூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மயக்க மருந்து கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது இரண்டு மாதங்களுக்கு பிறகு அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது.

ஏப்ரல் மாத சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த மருந்தின் பயன்பாட்டைக்கு இலங்கை சுகாதார அமைச்சகம் தற்காலிக தடை விதித்தது. இந்த சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்னரே, பதிவு செய்யப்படாத விநியோக நிறுவனத்திடமிருந்து மருந்துகளை வாங்க இலங்கை அமைச்சரவை எடுத்த முடிவுக்கு எதிராக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா அமைப்பு, இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது.

இந்திய மருந்துகளை அதிகம் பயன்படுத்தும் இலங்கை:

இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளை விரைவாக இறக்குமதி செய்ய அனுமதி பெறுவதற்கு விலக்கு வழங்கப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இந்த விவகாரத்தில் தேசிய மருந்து கட்டுப்பாட்டாளரின் பங்கை ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா அமைப்பு கேள்வி எழுப்பியிருந்தது.

குஜராத்தைச் சேர்ந்த Savorite Pharmaceuticals (Pvt) Limited மற்றும் சென்னையைச் சேர்ந்த Kausik Therapeutics ஆகியவை பதிலளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது. கடந்த ஏப்ரல் மாதம், வழக்கைத் தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி, இந்த நிறுவனங்களின் இறக்குமதியை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.

பல ஆண்டுகளாக, இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளைதான் இலங்கை அதிகமாக இறக்குமதி செய்து வருகிறது. கடந்த 2002ஆம் ஆண்டு, இறக்குமதி செய்யப்பட்ட மொத்த மருந்துகளில் கிட்டத்தட்ட 50 சதவிகித மருந்துகள் இந்தியாவிலிருந்து சென்றுள்ளன. அதன் மதிப்பு மட்டும் 450 மில்லியன் டாலர்களாகும். கடந்தாண்டு இலங்கை நடந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தபோது, இந்தியாவுடனான வர்த்தக உறவு மேலும் முக்கியத்துவம் பெற்றது.

குறிப்பாக, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் பற்றக்குறை காரணமாக இலங்கை தவித்த வந்த நிலையில், இந்தியாவில் இருந்து அங்கு அதிக மருந்துகள் சென்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Breaking News LIVE: தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா? விஜய்யை மறைமுகமாக சாடிய திருமாவளவன்
Breaking News LIVE: தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா? விஜய்யை மறைமுகமாக சாடிய திருமாவளவன்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Embed widget