Independence Day Quotes: காந்தி முதல் பகத்சிங் வரை! சுதந்திர போராட்ட தியாகிகளும் முத்தான பொன்மொழிகளும்!
Independence Day Inspirational Quotes: இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தன்னிகரில்லா தலைவர்களின் சில பொன்மொழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
Independence Day 2024: 1947ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி நள்ளிரவு, ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆங்கிலேயர்களிடம் இருந்து பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரப் போராட்ட வரலாறு மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகம் ஆகியவற்றை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சுதந்திரம் தினம் கொண்டாடப்படுகிறது. எண்ணற்ற இந்தியர்களின் தன்னலமற்ற போராட்டத்தினால் சுதந்திரம் கிடைத்தது.
1947ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15ஆம் தேதி, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, டெல்லி செங்கோட்டையில் உள்ள லாஹோரி கேட் என்ற இடத்தில் இந்திய தேசியக் கொடியை ஏற்றினார். அன்றுமுதல், ஒவ்வொரு ஆண்டும் இந்தியப் பிரதமர் செங்கோட்டையில் கொடி ஏற்றி, உரையாற்றுவார்.
நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் கொடி ஏற்றி சுதந்திர தினம் கொண்டாடப்படும்.
இந்தியாவின் 78-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், சுதந்திர போராட்ட வீரர்கள், தலைவர்கள் கூறியவைகளை காணலாம்.
மகாத்மா காந்தி:
சுதந்திர போராட்டத்தில் அகிம்சை வழியை முன்னெடுத்தவர் மோகன கரம்சந்த் காந்தி. தேச தந்தை என்று அன்புடன் அழைப்படுபவர் மகாத்மா காந்தி. அவரின் பொன்மொழிகள்..
- அதிகாரத்தை கைப்பற்றுவது இலக்கு அல்ல; அகிம்சை வழியில் விடுதலை பெறுவதே எண்னம்!
- வாய்மையே வெல்லும்; உண்மையை தவிர மற்றவை கால போக்கில் மறைந்துவிடும்.
- உலக வரலாற்றில் ஜனநாயக தன்மையுன் நடந்த விடுதலை போராட்டம் இந்தியாவினுடையது என்றே நம்புகிறேன்!
- செய் அல்லது செத்து மடி என்பதே விடுதலைக்கான வழியாக இருக்கும்!
- இந்த உலகில் மாற்றம் கொண்டு வர விரும்பினால், முதலில் உன்னிடமிருந்து மாற்றத்தை தொடங்கு!
அம்பேத்கர்:
இந்திய அரசியலைப்புச் சட்டத்தை இயற்றியவர் டாகடர். பி.ஆர் . அம்பெத்கர். புரட்சியாளர். சிந்தனையாளர்.சட்டமேதை என்று போற்றப்படுபவர் அண்ணல் அம்பேத்கர். சாதியால் ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களை பற்ற பேசியவர். இந்தியாவில் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக மாற்றங்கள் வர என்ன செய்ய வேண்டுமோ அதற்காக போராடியவர்.
- ஒரு பெண் அடைந்திருக்கும் முன்னேற்றத்தை வைத்துதான் சமூகத்தின் முன்னேற்றம் அளவிடப்படும்.
- அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தை குழிதோண்டி புதையுங்கள்.
- தலைவிதி என்ற எண்ணமே தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலை உணர்வுகளை மரத்துப்போக செய்கிறது.
- வெற்றியோ, தோல்வியோ எது வந்தாலும் கவலை கொள்ள வேண்டாம். பாரடு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் கடமையை செய்வோம்.
- ஒரு லட்சியத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.
அறிவை தேடி ஓடுங்கள். நாளைய வரலாறு உங்கள் நிழலாக தேடி வரும். - சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைவதே வளர்சியடைந்த சமூகமாக இருக்க முடியும். எல்லா நிலைகளிலும் மாற்றம் நிகழ்வதே வளர்ச்சியாக கருதப்படும்!
- வாழ்க்கையில் எல்லாருக்கும் வாழ்க்கை தத்துவம் இருக்க வேண்டியது அவசியம். ஒவ்வொருவரும் தங்களுக்கான அறத்தை பின்பற்ற வேண்டும்.
பகத் சிங்:
புரட்சி என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர்களுள் பகத்சிங் பெயர் நிச்சயம் இடம்பெறும். தன்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரை பாதங்கள் இந்திய மண்ணில் இருக்க வேண்டும் என நினைத்தவர். தூக்கிலிடப்பட்டு இறந்தால் மண்ணில் கால்படாமல் போகுமே என்று வருந்தியவர். தன் உயிர் போகும் கடைசி தருணத்திலும் இந்தியாவின் விடுதலையை பற்றி மட்டுமே சிந்தித்தார். இவரின் பொன்மொழிகள் சிலதை நினைவுக் கூறுவோம்.
- கவலைகளை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட...லச்சியத்தை நினைத்து உதிரம் சிந்துவது மேலானது.
- மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள வரை தான் சட்டம் அதன் புனித தன்மையை பெற்றிருக்கும்.
- மிக ஆபத்தான ஒன்று குருட்டு நம்பிக்கை. இது மனிதனின் மூளையை முடமாக்கி மனிதனை பிற்போக்கில் தள்ளிவிடும்.
- தனி நபர்கள் இறந்துபோவார்கள். ஆனால், அவர்களின் கருத்துக்களை யாராலும் கொல்ல முடியாது.
- சிலரின் காதுகளுக்கு கேட்கும்படி விசயங்களை சொல்ல உரத்த குரல் தேவைப்படுகிறது.
முயற்சியுடன் செயல்படுபர்களே வெற்றி சாத்தியப்படும் - ஜவஹர்லால் நேரு:
மனிதர்கள் அன்பு என்ற நோக்கத்துடன் ஒன்று சேர்ந்து நின்றால் அதன் சக்தி அளவிட இயலாத அளவிற்கு இருக்கும். -வல்லபாய் படேல்
சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை - பால கங்காதர திலகர்
ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை சாதியில்; இழிவு கொண்ட மனிதரென்பது இந்தியாவில் இல்லையே! வாழி! கல்வி செல்வம் எய்தி மனமகிழ்ந்து கூடியே மனிதர் யாவும் சரி நிகர் சமானமாக வாழ்வமே!- மாகாகவி பாரதியார்.