Headlines Today, 28 Oct: கேல் ரத்னா விருது முதல் அக்னி-5 ஏவுகனை வரை இன்றைய முக்கிய செய்திகள்!
நீரஜ் சோப்ரா, ரவி தஹியா, ஸ்ரீஜேஷ், லவ்லினா, சுனில் சேத்ரி உட்பட 11 பேர் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு
*’இல்லம் தேடி கல்வி’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதலியார்குப்பத்தில் இந்த புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கடலூர் உள்பட 12 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
*முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநில மக்களின் நலனும் பாதுகாக்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எழுதிய கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உறுதி
*நவம்பர் 9-ம் தேதி திருச்செந்தூரில் நடைபெற இருக்கும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
*தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 1075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் ஒரே நாளில் 139 பேருக்கு தொற்று உறுதியானது. கொரோனாவால் 12 பேர் உயிரிழந்தனர்.
*சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 105.13-க்கும், ஒரு லிட்டர் டீசல், ரூ. 101.25-க்கும் விற்பனையாகிறது. இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய் அன்று அதே விலையில் விற்பனையான பெட்ரோல் டீசல், நேற்றும், இன்றும் விலை ஏற்றத்தை கண்டுள்ளது.
இந்தியா
*ஒடிஷா மாநிலம் கலாம் தீவில் இருந்து ஏவப்பட்ட, கண்டம் விட்டு கண்டம் தாக்கும் அக்னி-5 ஏவுகனை சோதனை வெற்றி பெற்றுள்ளது.
*பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரத்தில் நிபுணர் குழு விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
*ராஜஸ்தானில் ‘We Won' என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் படங்களுடன் வாட்ஸ் அப் ஸ்டேடஸ் வைத்த தனியார் பள்ளி ஆசிரியர் நவிஷா அட்டாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உலகம்
*உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.57 கோடியைக் கடந்துள்ளது. இதுவரை 22.27 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 49.87 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
*வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்திற்கு ஆதரவு தெரிவித்து பிரிட்டனில் உள்ள வங்கால இந்துக்கள் பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
பொழுதுபோக்கு
*சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் டிரெய்லர், நேற்று வெளியான 1 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அசத்தியுள்ளது. இன்று காலை நிலவரப்படி 4+ மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
*ஹூட் செயலியை உருவாக்கியிருக்கும் ரஜினியின் மகள் சௌந்தர்யா விசாகன், நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
விளையாட்டு
*நீரஜ் சோப்ரா, ரவி தஹியா, ஸ்ரீஜேஷ், லவ்லினா, சுனில் சேத்ரி உட்பட 11 பேர் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் உட்பட 35 பேர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
*ஸ்காட்லாந்துக்கு எதிரான டி-20 உலகக்கோப்பை சூப்பர் 12 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் நமிபியா அணி வெற்றி பெற்றது
*நேற்று நடைபெற்ற மற்றொரு சூப்பர் 12 போட்டியில், வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்