Rahul Dravid: பா.ஜ.க.வில் இணைகிறாரா ராகுல் டிராவிட்? யுவ மோர்ச்சாவில் பங்கேற்க உள்ளதாக தகவல்!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடக்கும் யுவ மோர்ச்சாவின் நேசனல் வொர்க்கிங் கமிட்டியின் விழாவில் பங்கேற்க உள்ளார்.
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான ராகுல் டிராவிட் (Rahul Dravid) பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடக்கும் யுவ மோர்ச்சாவின்(Yuva Morcha) நேசனல் வொர்க்கிங் கமிட்டி (National Working Committee)-யின் விழாவில் பங்கேற்க உள்ளார் என பா.ஜ.க.வின் ஹிமாச்சல பிரதேச எம்.எல்.ஏ. நஹிரீயா ( Naheria) கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தேசிய மற்றும் மாநில தலைவர்களுடன், கட்சி உறுப்பினர்கள் பங்கேற்கும் மூன்று நாள் செயற்க்குழு கூட்டம் வரும் மே 12 ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில்,. பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா (JP Nadda) மற்றும் முக்கிய அமைச்சர்கள் என கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பங்கேற்க இருப்பதாக ஹிமாச்சல பிரதேச எம்.எல்.ஏ. நஹிரீயா ( Naheria) கூறியுள்ளாதாக செய்தி ஏஜென்சியான ஏ.என்.ஐ. தகவல் தெரிவித்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் National Working Committee யுவ மோர்ச்சாவின் கூட்டம் தர்மசாலாவில் வரும் மே 12 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள பா.ஜ.க. கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். .
இந்த செயற்க்குழு கூட்டத்தில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பங்கேற்று இளைஞர்களிடம் தன் வெற்றிப் பயணம் குறித்து உரையாற்றுவார் என்று கூறப்பட்டுள்ளது.
ராகுல் டிராவிட் இந்த நிகழ்வில் பங்கேற்பது தற்போது விவாத பொருளாகியுள்ளது. ஏனெனில் வரும் நவம்பர் மாதம் ஹிமாச்சல பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு, அம்மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடிக்க இது போன்ற ஏற்பாடுகளை செய்வதாக கூறப்படுகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க 44 இடங்களிலும், காங்கிரஸ் 21 இடங்களிலும், மற்ற கட்சிகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஹிமாச்சல பிரதேசத்தில் மொத்த 68 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சியில் பிரதான கட்சிகளாக இருக்கிறது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி நடந்து முடிந்த பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற்றதையெடுத்து, ஹிமாச்சல் பிரதேசத்திலும் தங்கள் வெற்றிக் கணக்கை தொடர முயற்சி செய்து வருகிறது. அது போலவே, பா.ஜ.க.வும் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ராகுல் டிராவிட் பாரதிய ஜனதா கட்சியில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு ரசிர்கர்கள் இணையத்தில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
Finally Rahul Dravid the 'Wall' is breached!! https://t.co/YeDcNchhOA
— B.Paul (@bjpaulshere) May 9, 2022
Finally Rahul Dravid the 'Wall' is breached!! https://t.co/YeDcNchhOA
— B.Paul (@bjpaulshere) May 9, 2022
Even Rahul Dravid?! Why?? 🤯 https://t.co/GsPoVoZ4qQ
— Vineet Thakur (@vineet1232) May 9, 2022
While I respect their choice. Even though I am a BJP supporter, I still don’t like the idea of sports icons joining politics.
— Warrior Shetty (@warriorshetty) May 9, 2022
I understand Babita phogat but why Rahul Dravidian? He is not in politics.
— Tamizh Nationalist (@bostoniancskfan) May 8, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்