Indian Government clarification: வருத்தமளிக்கும் நிகழ்வுதான்.. பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ஏவுகணை விழுந்ததிற்கு இந்தியா விளக்கம்..!
பாகிஸ்தானில் ஏவுகணை விழுந்தது ஒரு தற்செயலான நிகழ்வு என்றும் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் இந்தியா தெரிவித்திருக்கிறது.
பாகிஸ்தானில் ஏவுகணை விழுந்தது ஒரு விபத்து என்றும் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் இந்தியா தெரிவித்திருக்கிறது.
கடந்த புதன்கிழமை மாலை 6.43 மணி அளவில் இந்திய எல்லையிலிருந்து புறப்பட்ட சூப்பர் சோனிக் வகை ஏவுகணை, பாகிஸ்தான் எல்லைக்குள் சுமார் 124 கிமீ தூரத்தில் விழுந்ததாக தெரிகிறது. இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில், இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் விமானப்படை தெரிவித்திருந்தது.
இதுதொடர்பாக பேசிய விமானப்படை மேஜர் ஜெனரல் பாபர் இஃப்திகார், ``இந்தியாவின் ஹரியானா மாநிலம் சிறுசா நகரத்திலிருந்து ஏவப்பட்ட சூப்பர் சோனி ஏவுகணை பாகிஸ்தானின் மியா சானு என்ற பகுதியில் விழுந்தது. இதனையடுத்து நாங்கள் மேற்கொண்ட சோதனையில் அது சூப்பர் சோனிக் வகையை சார்ந்த ஏவுகணை என்பது தெரியவந்தது. இந்த ஏவுகணை சோதனையில், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
40,000 அடி உயரத்தில் பறந்து வந்த ஏவுகணை 124 கி.மீ தூரம் பயணித்து பாகிஸ்தான் எல்லையை நுழைந்திருக்கிறது. இதில், தனியாருக்கு சொந்தமான சில சொத்துகள் சேதமாகியுள்ளன. முன்னமே சரியான தகவல் எதுவும் கொடுக்காமல் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனைக்கு இந்திய அரசு முறையான விளக்கம் அளிக்க வேண்டும்” என்று பேசியிருந்தார்.
India regrets accidental firing of missile which landed in Pakistan
— ANI Digital (@ani_digital) March 11, 2022
Read @ANI Story | https://t.co/QrNdcVWt9l#India #Pakistan pic.twitter.com/V5w62m3TxK
இந்த நிலையில் இதற்கு விளக்கமளித்துள்ள இந்திய அரசு, பாகிஸ்தான் எல்லைக்குள் ஏவுகணை விழுந்துள்ளது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இது ஒரு தற்செயலான நிகழ்வு. இந்த சம்பவம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிகழ்ந்துள்ளது. இதற்கு இந்திய அரசு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது. இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் உயிர்சேதம் ஏற்படாதது நிம்மதியளிக்கிறது என்று கூறியுள்ளது.
மேலும் படிக்க : காங்கிரஸ் விரும்பினால் 2024 தேர்தலில் இணைந்து போட்டியிடலாம்: மம்தா பானர்ஜி
மேலும் படிக்க : Miss Bikini Archana Gautam : கீழே விழுந்தாதான் குழந்தை நடக்க கத்துக்கும்.. தேர்தலில் தோல்வி அடைந்த மிஸ் பிகினி இந்தியா அர்ச்சனா கவுதம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்