India Corona Spike: மீண்டும் எகிறிய கொரோனா.. ஒரே நாளில் 10 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு...! 38 பேர் உயிரிழப்பு...!
இந்தியாவில் கடந்த 4 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
India Corona Spike: இந்தியாவில் கடந்த 4 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்து நிலையில், மீண்டும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 7,633 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்று 10,542 ஆக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
கொரோனா
கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை நிலைகுலைய வைத்த கொரோனா மீண்டும் அச்சத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலின் காரணமாக ஹரியானா, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், பிற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசத்தை கட்டாயமாக அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய தலைநகரான டெல்லியில் மருத்துவமனைகள், கிளினிக் மற்றும் மருந்தகங்களில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்குமாறு சுகாதாரத்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
10 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு
இந்நிலையில், கடந்த 4 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்து நிலையில், மீண்டும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 7,633 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்று 10,542-ஆக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் 61,233லிருந்து 63,562-ஆக அதிகரித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,48,34,859 லிருந்து 4,48,45,401-ஆக உயர்ந்துள்ளது.
Covid19 | 10,542 new cases in India today; Active caseload at 63,562 pic.twitter.com/E93TDkdWlx
— ANI (@ANI) April 19, 2023
கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, அதில் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி விகிதம் 4.39 சதவிகிதமாக உள்ளது. பாதிப்புக்குள்ளானர்களின் வார விகிதம் 5.1 சதவிகிதமாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4.48 கோடியாக உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 8,175 பேர் கடந்த 24 மணி நேரத்தில் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 4.42 கோடி பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
38 பேர் உயிரிழப்பு
மேலும், கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 190ஆக உள்ளது. கொரோனா பாதிப்பிற்கு கடந்த 24 மணி நேரத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் மகாராஷ்ராவில் 6 பேரும், டெல்லியில் 5 பேரும், சத்தீஸ்கரில் 4 பேரும், கர்நாடகாவில் 3 பேரும், ராஜஸ்தானில் 2 பேரும், கேரளாவில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும், புதுச்சேரி, பஞ்சாப், தமிழ்நாடு, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலத்தில் தலா ஒரு உயிரிழப்புகளும் பதிவாகி உள்ளன. கடந்த 24 நேரத்தில் 1.79 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை, 220.66 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க