மேலும் அறிய

INDIA Alliance : முடிவுக்கு வந்த பிரச்னை.. அதிரடிக்கு தயாராகும் INDIA கூட்டணி.. புது தகவல் என்ன?

வரவிருக்கும் மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து INDIA கூட்டணியின் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் என கூறப்படுகிறது.

ஐந்து மாநில தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஐந்தில் மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியும் மிசோரத்தில் ஜோரம் மக்கள் இயக்கமும் ஆட்சியை பிடித்துள்ளது. 

5 மாநில தேர்தல் முடிவுகள் எதிரொலி:

மக்களவை தேர்தல் நடக்க இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 4 மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளதால், எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழல் உருவானது.

ஏன் என்றால், INDIA கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கு, நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் தொகுதிகள் ஒதுக்கவில்லை. தெலங்கானாவை தவிர்த்து 4 மாநிலங்களிலும் தனித்தே களம் கண்டது. குறிப்பாக, மத்திய பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்த்தபோதிலும், அக்கட்சிக்கு காங்கிரஸ் ஒரு தொகுதி கூட ஒதுக்கவில்லை. இதுகுறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், வெளிப்படையாகவே தனது அதிருப்தியை பதிவு செய்திருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில், டிசம்பர் 6ஆம் தேதி, INDIA கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறவிருந்தது. ஆனால், ஐக்கிய ஜனதா கட்சி தலைவரும் பிகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என அறிவித்தனர். இதனால், INDIA கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

அதிரடிக்கு தயாராகும் INDIA கூட்டணி:

இந்த நிலையில், வரும் டிசம்பர் 19ஆம் தேதி, INDIA கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரவிருக்கும் மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த கூட்டம், தேசிய தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

3 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்திருப்பதால் மாநில கட்சிகள் செல்வாக்கு செலுத்தும் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு குறைவான தொகுதிகளை ஒதுக்க INDIA கூட்டணியில் இடம்பெற்ற மாநில கட்சிகளின் தலைவர்கள் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையே வார்த்தை போர் நீடித்து வந்த நிலையில், மூத்த தலைவர்களின் தலையீட்டால் அந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.                                                             

இதையும் படிக்க: யாரும் எதிர்பார்க்கல.. அரசியல் வாரிசை அறிவித்து சர்ப்ரைஸ் கொடுத்த மாயாவதி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget