11 AM Headlines: முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு - ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம்? முக்கியமான 10 செய்திகளின் ரவுண்ட்-அப்..
11 AM Headlines: இன்றைய காலைப்பொழுதின் முக்கியமான 10 செய்திகளின் விவரங்களை சுருக்கமாக இந்த தொகுப்பில் அறியலாம்.
”வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் கட்சியிலும் ஆட்சியிலும் அதிரடி” முதல்வர் ஸ்டாலினின் சரவெடி திட்டம்..!
அமெரிக்க சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 12ஆம் தேதி தமிழ்நாடு திரும்புகிறார். அதன்பிறகு, அமைச்சரவையில் மாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தயாரக உள்ளது என்றும் முதல்வர் வெளிநாட்டில் இருந்து வந்த பின்னர் அறிவிப்பு வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே மாதிரி, திமுகவிலும் அமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தி முதல்வருக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
வீடுகள் தோறும் திமுக கொடி பறக்கட்டும் - தொண்டர்களுக்கு கட்சி தலைவர் ஸ்டாலின் உத்தரவு
திமுக பவளவிழாவை ஒட்டி கட்சியினர் இல்லங்கள், அலுவலகங்களில் கட்சியை கொடியேற்றுமாறு அக்கட்சி தலைவர் ஸ்டால்ன் உத்தரவிட்டுள்ளார்.கருணாநிதி கட்டிக்காத்த திமுக 75 ஆண்டுகளாக மக்களுக்கு பணியாற்றி, பவள விழா நிறைவை கொண்டாடுவதாக பெருமிதம்.
ஹிப் ஹாப் ஆதி இசை நிகழ்ச்சியில் அடிதடி சண்டை.. மோதிக்கொண்ட இளைஞர்களால் பரபரப்பு..
கோவையில் இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்பாப் ஆதியின் இசை நிகழ்ச்சியில் இளைஞர்களுக்கு இடையே அடிதடி சண்டை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நடனமாடும் போது, இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. சம்பவ இடத்தில் இருந்த காவல் துறையினர் சண்டையிட்ட இளைஞர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.
நாடே எதிர்பார்ப்பு..! இன்சூரன்ஸ் வரி குறையுமா? டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% வரி? இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், இன்று ஜிஎஸ்டி கவுன்சிலின் 54வது கூட்டம் நடைபெற உள்ளது. அதன் முடிவில் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளின் பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டி வரி ரத்து செய்வது குறித்து ஆலோசிக்கப்படலாம். அதேநேரம், ரூ.2000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 18% வரி விதிக்கப்படுவது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
"பாகிஸ்தானுடன் நல்லுறவு" : வழியை மாற்றும் பாஜக.. தேர்தல் நேரத்தில் பொடி வைத்து பேசிய ராஜ்நாத் சிங்!
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தினால், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக உள்ளது.அண்டை நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்த யார்தான் விரும்ப மாட்டார்கள்? என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
புதிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்கள்: குடியரசு துணை தலைவர் தெரிவித்த கருத்து என்ன?
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், “புதிய தேசியக் கல்விக் கொள்கையை இன்னும் ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள் தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்ததோடு, இந்த கொள்கை தேசத்திற்கு நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்” என தெரிவித்தார்.
கோர விபத்து..! வெடித்து சிதறிய எரிபொருள் டேங்கர் - 48 பேர் உயிரிழப்பு, 50 மாடுகள் கருகின
மேற்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்த நாடு நைஜீரியா நாட்டில் எரிபொருள் டேங்கர் மீது, எதிரே வந்த லாரி மோதியது. இதில் 48 பேர் உடல் கருகி உயிரிழந்த நிலையில், 50 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லாரியில் ஏற்றி வரப்பட்ட 50 மாடுகளும் தீயில் கருகின.
ஆப்பிள் பயனாளர்களே..! இன்று லான்ச் ஆகிறது ஐபோன் 16 சீரிஸ் போன், எதிர்பார்ப்புகள் என்ன? ஒரு சர்ப்ரைஸ்
ஆப்பிள் நிறுவனத்தின் இன்றைய க்ளோடைம் நிகழ்ச்சியில், ஐபோன் 16 சீரிஸ் மற்றும் வாட்ச் சீரிஸ் 10 ஆகியவை அறிமுகப்படுத்தப்படலாம். இந்த நிகழ்ச்சி இந்திய நேரப்படி இன்று இரவு 10:30 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆப்பிளின் இணையதளம், யூடியூப் அல்லது ஆப்பிள் டிவி ஆப்ஸ் மூலம் நிகழ்வை நேரலையில் பார்க்கலாம்.
முதல் வீக் எண்ட் ஓவர்- விஜயின் தி கோட் பட வசூல் நிலவரம் என்ன? 2வது வாரம் தாங்குமா?
விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படத்தின் உள்நாட்டு மொத்த வசூல், முதல் வார முடிவில் 150 கோடி ரூபாயை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் தமிழ் வெர்ஷன் மட்டுமே 110 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
வங்கதேச டெஸ்ட்! ஒன்றரை வருடத்திற்கு பிறகு கம்பேக் தந்த ரிஷப் பண்ட்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில், ரிஷப் பண்ட் பெயர் இடம்பெற்றுள்ளது. 26 வயதான ரிஷப்பண்ட் விபத்தில் சிக்குவதற்கு முன்பு கடைசியாக 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கதேச அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஆடியிருந்தார்.