மேலும் அறிய

IIT Student Suicide : ஐஐடி மாணவர் தற்கொலை...சாதிய பாகுபாடு குறித்து குற்றப்பத்திரிகையில் வெளியான உண்மை..!

மும்பையில் உள்ள ஐஐடியில் 18 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

நாட்டின் தலைசிறந்த கல்வி நிலைங்களாக திகழும் ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாக ஐஐடி மீது தொடர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது.

ஐஐடியில் தொடரும் தற்கொலைகள்:

அதன் தொடர்ச்சியாக, மும்பையில் உள்ள ஐஐடியில் 18 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. போவாய் பகுதியில் அமைந்துள்ள ஐஐடி கல்லூரியின் மாணவர் விடுதியில் தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி, விடுதியின் 7ஆவது மாடியில் இருந்து குதித்து மாணவர் தர்ஷன் சோலங்கி தற்கொலை செய்து கொண்டார். 

ஐஐடி கல்லூரியில் பட்டியல் சாதி மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு காரணமாக அவர் தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாக மாணவர் குழுவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே, வழக்கின் விசாரணை காவல்துறையிடம் இருந்து சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த வழக்கில் காவல்துறை தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் சாதிய பாகுபாடு நிலவியதாக தன்னுடைய தாயிடம் தர்ஷன் சோலங்கி தெரிவித்திருப்பதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகையில் பகீர் தகவல்கள்:

தன் சாதியைப் பற்றி அறிந்ததும் சக மாணவர்கள் நடந்து கொள்ளும் விதம் மாறியதாகவும் தொலைபேசி உரையாடல்களின் போது தர்ஷன் சோலங்கி தனது தாயிடம் கூறினார். பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் ஒரு பகுதியாக சோல்னாகியின் தாயின் வாக்குமூலம் இடம்பெற்றுள்ளது.

"2023ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், மகர சங்கராந்தி விடுமுறையின் போது சோலங்கி தனது சகோதரியிடம் இதைப் (சாதிய பாகுபாடு) பற்றி மீண்டும் பேசினார். சோலங்கியின் சகோதரி மற்றும் அத்தையும் கூட, அவர் சாதி பாகுபாட்டை எதிர்கொண்டதாகவும், சாதி குறித்து அறிந்ததும் மற்ற மாணவர்கள் நடந்து கொள்ளும் விதம் மாறியதாக வாக்குமூலம் அளித்தனர்" என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகையில் தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள சக மாணவர் அர்மான் காத்ரி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மதத்தைப் பற்றி சோலங்கி அவதூறாகப் பேசியதையடுத்து காத்ரி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்த வழக்கின் விசாரணையில் காவல்துறை தன் குடும்பத்தை கொடுமைபடுத்தியதாக கூறி மாணவரின் தந்தை மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், "கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய மறுத்தனர். காவல்துறை மற்றும் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) உறுப்பினர்களின் அணுகுமுறையால் குடும்பத்தினர் முற்றிலும் அதிர்ச்சியும் மனமுடைந்தும் உள்ளனர்.

எனது மகன் இறந்த வழக்கில் மார்ச் 16 அன்று நான் அளித்த புகாரின் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்வதற்காக நான் எனது குடும்பத்தினருடன் அகமதாபாத்தில் இருந்து போவாய் காவல் நிலையத்திற்குச் சென்றிருந்தேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும், நாங்கள் கோரிக்கை விடுத்தும் போவாய் காவல் நிலையம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுத்துவிட்டது. 

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10: தமிழகம் மற்றும் இந்தியாவில் இன்று நடந்த பரபரப்பான சம்பவங்கள்!
இன்றைய டாப் 10: தமிழகம் மற்றும் இந்தியாவில் இன்று நடந்த பரபரப்பான சம்பவங்கள்!
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க முடியுமா? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் என்ன?
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க முடியுமா? ரயில்வேயின் முக்கிய விதிகள் என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Mahindra XEV 9S: கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Embed widget