'ஐபிஎல்-ஐ உருவாக்கியவன் நான்.. 40 கோடியை 47,680 கோடியாக மாற்றினேன்' - வெடித்துகொட்டிய லலித்மோடி!
நீங்கள் என்னை தப்பியோடியவர் என்று கூறினால் அதைப்பற்றி நான் கவலைப்படப் போவதில்லை என்று ஐபிஎல் நிறுவனரான லலித் மோடி தெரிவித்துள்ளார்.
நீங்கள் என்னை தப்பியோடியவர் என்று கூறினால் அதைப்பற்றி நான் கவலைப்படப் போவதில்லை என்று ஐபிஎல் நிறுவனரான லலித் மோடி தெரிவித்துள்ளார்.
”மத்திய காலத்திலேயே இருக்கிறோம்:”
தானும் நடிகை சுஸ்மிதா சென்னும் டேட்டிங்கில் இருப்பதாக லலித் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அது இணையத்தில் பேசுபொருளானது. லலித் மோடி மற்றும் சுஸ்மிதா சென் பற்றிய தகவல்களைப் பற்றி ஊடகங்கள் தொடர்ந்து பேசின. இது தொடர்பாக லலித் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், “ஊடகங்கள் என்னை கிண்டல் செய்வதில் ஏன் இவ்வளவு ஆவேசமாக இருக்கின்றன. யாராவது விளக்க முடியுமா? நான் இரண்டு புகைப்படங்களை மட்டுமே இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினேன். டேக்கும் சரியாக இருந்தது. இரண்டு பேர் நண்பர்களாக இருக்கமுடியாது என்று நினைக்கும் மத்திய காலத்திலேயே நாம் எல்லோரும் இன்னும் வாழ்கிறோம் என்று நினைக்கிறேன். கெமிஸ்ட்ரி சரியாக இருந்தால், நேரமும் நன்றாக இருந்தால் அதிசயங்கள் நிகழும்.” என்று கூறியுள்ளார்.
”டொனால்ட் ட்ரம்ப் வகை செய்திகள்:”
மேலும், “நம் நாட்டில் பொறுப்பான வழக்குகள் ஏதும் இல்லை என்பதால் எல்லா ஊடகவியலாளர்களும் மிகப்பெரிய கோமாளியான அர்னாப் கோஸ்வாமியாக வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். வாழுங்கள். வாழ விடுங்கள் என்பது தான் என்னுடைய அறிவுரை. சரியான செய்தியை எழுதுங்கள். டொனால்ட் ட்ரம்ப் வகை பொய் செய்திகளை எழுதாதீர்கள். உங்களுக்குத் தெரியவில்லை என்றால் எல்லாவற்றையும் நான் தெளிவுபடுத்துகிறேன். என் வாழ்க்கையில் இருந்து புறப்பட்டுவிட்ட மினல் மோடி எனக்கு 12 ஆண்டுகளாக நல்ல நண்பர். அவர் என் தாயின் நண்பர் இல்லை. இந்த கிசுகிசுக்களை தங்கள் சொந்த நலனுக்காக பரப்புகின்றனர். இந்த நண்டு மனநிலையில் இருந்து வெளிவரவேண்டிய நேரம். உங்களுக்கு நான் என்ன சொல்கிறேன் என்று புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.” என்று லலித் மோடி கூறியுள்ளார்.
View this post on Instagram
”நான் குற்றவாளி இல்லை:”
அதோடு, “யாராவது பிரகாசிக்கும்போது மகிழுங்கள். நீங்கள் என்னை தப்பியோடியவர் என்று கூறுகிறீர்கள். எந்த நீதிமன்றம் என்னை குற்றவாளி என்று கூறியது என்று சொல்ல முடியுமா?. நம் அழகிய நாட்டில் நான் உருவாக்கியது போன்ற ஒன்றை வேறு யாராவது உருவாக்கினார்களா என்று ஒரு நபரைக் காட்டுங்கள். நான் உருவாக்கியதை நாட்டிற்கு பரிசளித்தேன். எல்லோருக்கும் தெரியும் இந்தியாவில் உள்ள 15 நகரங்களில் 12ல் தொழில்நடத்துவது எவ்வளவு கடினம் என்று.”
”ஐபிஎல்லை உருவாக்கியது நான்:”
“ஐபிஎல் டி20 மந்த நிலைக்கானச் சான்று என்று கடந்த 2008ம் ஆண்டே கூறினேன். எல்லோரும் சிரித்தார்கள். இப்போது யார் சிரிக்கிறார்கள். ஏனெனில் உலகில் எல்லோருக்கும் தெரியும் எல்லாவற்றையும் நான் தனியாகவே செய்தேன் என்று. பிசிசிஐ-ல் இருந்தவர்கள் எதையும் செய்யவில்லை. தற்போது நாட்டை ஒற்றுமையாக்கிய, எல்லோரும் மகிழும் விளையாட்டை நான் உருவாக்கினேன். அதை உருவாக்கிய வேறுயாரையாவது உங்களுக்கு இன்று தெரியுமா?” என்று லலித் மோடி கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், “நீங்கள் என்னை தப்பியோடியவர் என்று கூறினால் அதைப்பற்றி நான் கவலைப்படுவேன் என்று நினைக்கிறீர்களா? இல்லை. நான் டைமண்ட் ஸ்பூனுடன் பிறந்தவன். நான் லஞ்சம் பெறவில்லை. அதற்குத் தேவையும் ஏற்படவில்லை. நான் ராய் பகதுர் குஜ்ஜர்மால் மோடியின் மூத்த பேரன் என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்கள். நான் பணத்தை வாங்கினேன். எடுக்கவில்லை. குறிப்பாக பொதுமக்கள் பணத்தை.”
”பிசிசிஐ-ன் வருமானம்:”
“இது நீங்கள் விழிக்க வேண்டிய நேரம். நான் பிசிசிஐ-ல் சேர்ந்த போது அதன் வங்கிக்கணக்கில் 40 கோடி மட்டுமே இருந்தது. எனது பிறந்த நாளான நவம்பர் 29ம் தேதி 2005ல் பிசிசிஐ-ல் இணைந்தேன். நான் தடை செய்யப்பட்டபோது வங்கியில் எவ்வளவு இருந்தது என்று யூகிக்க முடிகிறதா? 47,680 கோடி இருந்தது. அதாவது 17 பில்லியன் அமெரிக்க டாலர்கள். எந்த கோமாளியாவது உதவினாரா? இல்லை. அவர்களுக்கு எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று கூட தெரியவில்லை. போலி ஊடகங்கள் மீது அவமானம். அவர்கள் எல்லோரும் ஹீரோக்கள் போல நடிக்கிறார்கள். ஒருமுறையாவது நேர்மையாக இருங்கள்.” என்று லலித் மோடி தனது பதிவில் கூறியுள்ளார்.
அதேபோல, “என்னைப்பற்றித் தெரியாதவர்கள், நான் இதுவரை சந்தித்திராதவர்கள் எல்லாம் என்வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறார்கள்” என்று நடிகை சுஷ்மிதா சென் கூறியுள்ளார்.
View this post on Instagram
சுஸ்மிதா சென் பதிவு:
நடிகை சுஸ்மிதா சென் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், “நம்மைச் சுற்றியுள்ள உலகம் எவ்வளவு பரிதாபமாகவும் மகிழ்ச்சியற்றதாகவும் மாறிவருகிறது என்பதைப் பார்க்கும்போது மனவேதனையாக இருக்கிறது. நான் இதுவரை கொண்டிருக்காத நண்பர்கள், நான் இதுவரை நான் சந்தித்திருக்காதவர்கள் எல்லோரும் தங்கள் கருத்துகளையும், எனது வாழ்க்கையின் ஆழமான அறிவினையும் பகிர்ந்து கொள்கின்றனர். எனது நலம் விரும்பிகளும், அன்பானவர்களும் அவர்களது ஆதரவை தொடர்ந்து நீட்டிக்க விரும்புகிறேன். தயவுசெய்து தெரிந்துகொள்ளுங்கள். உங்களது சுஷ் நன்றாக இருக்கிரார். ஏனெனில் நான் தற்காலிகமாக கடன்வாங்கிய அங்கீகாரங்கள் மற்றும் கைதட்டல்களின் வெளிச்சத்தில் எப்போதும் வாழ்ந்ததில்லை. நான் சூரியன். எனது இருப்பு என் மனசாட்சியை மையப்படுத்தியது” என்று சுஷ்மிதா சென் கூறியுள்ளார்.