Allu Arjun: நடிகர் அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமீன்.! முழு விவரம்
Actor Allu Arjun Judicial Custody: நடிகர் அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து , உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இடைக்கால ஜாமீன் கிடைத்துள்ளது.

நடிகர் அல்லு அர்ஜூனுக்கு , எதற்காக கைது செய்யப்பட்டார்? எதற்காக 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பார்ப்போம்.
அல்லு அர்ஜூன் திரைப்பட சர்ச்சை:
அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதியன்று வெளியானது. தமிழ் , இந்தி, தெலுங்கு , கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படத்திற்கு பெரிய வரவேற்பு இருந்ததது.
ஹைதராபாதில் உள்ள சந்தியா திரையரங்கத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின் போது அங்கு அல்லு அர்ஜூன் திடீர் வருகை தந்தார்.
அப்போது அல்லு அர்ஜூனை காண ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு வந்ததாக கூறப்படுகிறது, அப்போது ஏற்ப்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 39 வயதான ரேவதி என்கிற பெண்மணியும் அவரது 9 வயது மகனும் கூட்டநெரிசலில் சிக்கிக்கொண்டனர், அதில் ரேவதி பரிதாபமாக உயிரிழந்த அவரது மகனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வருத்தம் தெரிவித்த அல்லு அர்ஜூன்:
இந்த சம்பவம் நடந்த இரு நாட்கள் கழிந்து அல்லு அர்ஜூன் தனது வருத்தத்தை வீடியோ மூலம் தெரிவித்திருந்தார். உயிரிழிந்த பெண்ணின் குடும்பத்தின் எதிர்காலத்தைப் கருத்தில் கொண்டு ₹ 25 லட்சம் வழங்குவதாக அவர் கூறினார். துக்கத்தில் இருக்கும் அந்த குடும்பத்திற்கு எந்த உதவிகளையும் செய்ய எங்கள் குழுவானது தயாராக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டது.
14 நாட்கள் நீதிமன்ற காவல்:
கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன் மீது, ஹைதராபாத் போலீஸ் ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கின் விசாரணைக்காக அல்லு அர்ஜூனை இன்று காவல்துறை கைது செய்தது. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளில்லாமல் அல்லு அர்ஜூன் திரையரங்கத்திற்கு வந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து, அல்லு அர்ஜூனை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தருணத்தில் , தற்போது அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது தெலங்கானா உயர்நீதிமன்றம். நடிகர் என்பதாலேயே, வாழ்வுரிமையை பறிக்க இயலுமா என்றும் கேள்வி எழுப்பியது.
சோகத்தில் ரசிகர்கள்:
புஷ்பா 2 திரைப்படம் ஆறு நாட்களில் ஆயிரம் கோடி வசூலித்து, இந்திய சினிமாவில் சாதனை படைத்துள்ளது. புஷ்பா 2 படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் இந்த மகிச்சியை கொண்டாடி வந்தனர். புஷ்பா 2 படத்தின் வெற்றி விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது.
இந்நிலையில், ஒருபக்கம் ரூ.1000 கோடி வசூலை கொண்டாடி வந்த ரசிகர்களுக்கு, அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு, 14 நாட்கள் காவலில் வைக்கப்பட்டது, ஜாமீன் கிடைத்தது உள்ளிட்ட சம்பவங்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

