மேலும் அறிய

Watch Video: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தங்கையை காரோடு கட்டித்தூக்கிய தெலங்கானா போலீஸ்... அரசியலில் பரபரப்பு!

தெலங்கானாவில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா காரில் இருந்தபோதே, காரை கிரேனில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.சர்மிளா காரில் இருந்தபோதே கிரேனில் காரை கட்டி இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கு  எதிராக சர்மிளா காரில் இருந்தபடியே போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். 

ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகள் ஒய்.எஸ்.சர்மிளா. இவரது சகோதரர்தான் தற்போதைய ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.
சர்மிளா, ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா கட்சியை கடந்த ஆண்டு தொடங்கினார்.

அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக அவர் செயல்பட்டு வருகிறார். இவர் தெலங்கானாவில் 3,500 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாத யாத்திரை மேற்கொண்டார். இந்த பாத யாத்திரை மூலம் அவர் 75 சட்டசபை தொகுதிகளை கடந்து அவர் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிகிறார்.

அவர் பாத யாத்திரை தொடங்கி 224 நாளானது. இந்நிலையில், ஐதராபாத் நகரில் அவர் காரில் இருந்து முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது காருக்குள் ஓட்டுநர் இருக்கையில் அவர் அமர்ந்திருந்தார். அவரை திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது.

CTET 2022: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம்; டிச.3 வரை திருத்தங்கள் செய்யலாம்; எப்படி?- விவரம்

எனினும், அவர் மறுப்பு தெரிவித்ததால், காரை கிரேனின் உதவியுடன் கட்டி சாலையில் இழுத்துச் சென்றனர்.
இதனால், அங்கு திரண்டிருந்த சர்மிளாவின் கட்சியினர் முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு எதிரான குரலெழுப்பின்ர.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, முதல்வர் சந்திரசேகர் ராவ் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் நுழைய சர்மிளா முயன்றார். அப்போது, அவரை தடுத்து உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Baby With Tail : ”குட்டி வாலு!” : மெக்சிகோவில் வாலுடன் பிறந்த பெண் குழந்தை..

முன்னதாக, லிங்காகிரி கிராமத்தில் சர்மிளா நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது போலீஸார் தடுத்து திருப்பி அனுப்பி வைத்தனர். அப்போது போலீஸார் பாதுகாப்புக்கு உடன் சென்றனர்.
அவர் நேற்று கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது. எனினும், ஐதராபாத் காவல் துறை உயரதிகாரி, இதனை மறுத்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?
Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?
HEAVY RAIN ALERT: மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain
சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?
Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?
HEAVY RAIN ALERT: மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
திமுக ஒன்றிய செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு! அதிமுக போராட்டம் அறிவிப்பு - சிவி சண்முகம் எச்சரிக்கை
திமுக ஒன்றிய செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு! அதிமுக போராட்டம் அறிவிப்பு - சிவி சண்முகம் எச்சரிக்கை
கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண் நியமனம்.
கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண் நியமனம்.
EPS ADMK: யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
Embed widget