உடலுறவுக்கும் சேர்ந்து வாழ்வதற்கும் ஒரே விதிதான்! நேர்கொண்ட பார்வையை உண்மையாக்கிய நீதிமன்றம்!!
குஜராத் நீதிமன்றன் வழங்கிய தீர்ப்பு ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.
திருமணம் தொடர்பான வழக்குகள் பெரும்பாலும் குடும்பநல நீதிமன்றங்களில் முதலில் நடைபெறும். அந்த நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு நபருக்கு ஏற்புடையதில்லை என்றால் அந்த தீர்ப்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். அப்படி மேல் முறையீடு செய்யப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பு என்ன?
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமிய தம்பதி ஒன்று 2010ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளது. அவர்களுக்கு 2015ஆம் ஆண்டு அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த தம்பதிக்கு நடுவே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதாவது அந்தப் பெண்ணை ஆஸ்திரேலியாவிற்கு சென்று கணவருடன் வசிக்குமாறு மணமகன் குடும்பத்தினர் வற்புறுத்தி உள்ளனர். அப்பெண் குஜராத்தில் செவிலியராக பணிப்புரிந்து வருகிறார். இதன்காரணமாக அவர் தன்னுடைய பணி விட்டு ஆஸ்திரேலிய செல்ல விருப்பமில்லை என்று கூறியுள்ளார்.
அதை மணமகன் குடும்பத்தினர் ஏற்க மறுத்து தொடர்ந்து வற்புறுத்தி வந்த காரணத்தால் அவர் கணவரை பிரிந்து குழந்தையுடன் தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். 2017ஆம் ஆண்டு முதல் அவர் தன்னுடைய தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரை பல முறை சென்று கணவர் அழைத்தும் அவர் திரும்பி வராமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருடைய கணவர் குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் மனைவி நிச்சயம் திருமண பந்தத்தை தொடர கணவருடன் வசிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்தத் தீர்ப்பால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜேபி.பர்திவாலா மற்றும் நிரல் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அவர்கள் இந்த வழக்கை விசாரித்து குடும்பநல நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
மேலும் அந்த தீர்ப்பில்,”கணவன்-மனைவி திருமண செய்து கொண்டதால் மட்டுமே அந்த பெண்ணை கணவர் கட்டாயப்படுத்த முடியாது. குற்றவியல் கோட்பாடுகளின் பிரிவு 32(1)-ன்படி கணவர் மனைவியை கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்து கொள்ள வேண்டும் என்று கேட்க முடியாது. அதேபோல் கணவருடன் விருப்பம் இல்லாமல் மனைவியை கட்டாயப்படுத்தி சேர்ந்து வாழ கூறமுடியாது” எனத் தெரிவித்துள்ளனர். இந்தத் தீர்ப்பு பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த பெண்ணிற்கு உரிய நீதியையும் வழங்கும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: வீடு முழுவதும் கஞ்சாதான்.! நியூ இயர் கொண்டாட்டத்துக்கு 96 கிலோ - தலைமறைவான நடிகர்..!