நிம்மதியான தூக்கம் ஒரு மனிதனுக்கு போதுமான அளவு புத்துணர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கிறது.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

தூங்குவதற்கு ஒரு முறையான நேரத்தை பின்பற்றுங்கள். அதை தேவையில்லாத விஷயங்களுக்காக மாற்றாதீர்கள்.

Image Source: Canva

தூங்குவதற்கு ஏற்ற சூழல் படுக்கையறையில் இருந்தால் மட்டுமே நிம்மதியான உறக்கம் அமையும். அதை ஏற்படுத்துங்கள்.

Image Source: Canva

இரவு உணவு ஆரோக்கியமாக சாப்பிட்டால் நிம்மதியான தூக்கம் வரும். இல்லாவிட்டால் ஜீரண கோளாறால் வயிற்றுப் பிரச்சினையுடன், தூக்கமும் கெடும்.

Image Source: Canva

உடல் உழைப்பு சரியாக இருந்தால் தூக்கமும் முறையாக அமையும். அதனால், போதுமான அளவு உடற்பயிற்சி செய்யுங்கள்.

Image Source: Canva

மனநிலையே தூக்கத்திற்கு மிகவும் அவசியம். அதனால் மன அழுத்தத்தை போக்கும் தியானம், யோகா தொடர்ந்து செய்யலாம்.

Image Source: Canva

இரவில் தூங்க வேண்டிய நேரம் எந்தளவு முக்கியமோ, அதேபோல பகலில் எழுந்திருக்க வேண்டியதும் மிகவும் அவசியம். அதுவே தூக்க சுழற்சியை சீராக வைத்திருக்கும்.

Image Source: Canva

படுக்கைக்குச் சென்றபின் செல்போன், மடிக்கணினி பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

Image Source: Canva

ஏராளமானோர் தூக்கத்தை கெடுக்கும் அம்சமாக செல்போன் அமைந்துள்ளது. இதனால், செல்போன் பயன்பாட்டை முற்றிலும் படுக்கையில் தவிர்ப்பது நல்லது.

Image Source: Canva

தூங்குவதில் தொடர்ந்து சிரமம் இருந்தால் தகுந்த மருத்துவரை அணுகுவது நல்லது ஆகும்.

Image Source: Canva