மேலும் அறிய

Karnataka Hijab Row | வகுப்புக்குள் ஹிஜாப், காவித்துண்டு அணியக்கூடாது: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்..

கல்வி நிலையங்களை மீண்டும் திறக்குமாறும் அனைத்து மாணவர்களும் காவித் துண்டுகள், ஷால்கள், ஹிஜாப் மற்றும் பிற மதச் சின்னங்களை வகுப்புக்குள் அணிந்து வருவதைத் தடுக்க வேண்டும் என்றும் கர்நாடக உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தின் உடுப்பி பகுதியில் முஸ்லிம் மாணவிகள் அரசு மகளிர் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. உடுப்பி, குந்தாப்பூர் பியுசி கல்லூரியில் முஸ்லிம் மாணவிகளுக்கு, வளாகத்துக்குள் ஹிஜாப் அணிந்து வரக் கடந்த அவரம் அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து மாணவிகள் வாயிற்கதவுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதைத் தொடர்ந்து கல்லூரிகளில் மத ரீதியான அடையாளத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றுகூறி பந்தார்கர் கல்லூரி ஆண் மாணவர்கள், இந்துத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் கழுத்தில் காவி நிறத் துண்டை அணிந்து வந்தனர். இதற்கிடையே பிப்.5 அன்று இந்து மாணவிகளும் கழுத்தில் காவி வண்ணத் துண்டை அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால் இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் பிப்.7 அன்று கல்லூரி வளாகத்துக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர அனுமதி அளிக்கப்பட்டது. அதேநேரத்தில் அவர்கள் தனியாக வேறொரு வகுப்பில் அமர வைக்கப்பட்டனர். அவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்படவில்லை.

Karnataka Hijab Row | வகுப்புக்குள் ஹிஜாப், காவித்துண்டு அணியக்கூடாது: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்..

இதுகுறித்து முஸ்லிம் மாணவிகள் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு பிப்.8 அன்று தனி நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வழக்கறிஞர் தேவ்தத் காமத், ஹிஜாப் அணியும் மாணவிகள் தரப்பில் இருந்து வாதாடினார். அவர், ''முஸ்லிம் கலாச்சாரத்தில், பெண்கள் தலையில் ஹிஜாப் அணிவது அடிப்படையான ஒன்று'' என்று தெரிவித்தார்.  

அரசுத் தரப்பில் வாதாடிய அட்வகேட் ஜெனரல் , ''கல்லூரி சீருடைகளைத் தீர்மானித்துக் கொள்ளும் முழு சுதந்திரத்தைக் கல்லூரிகளுக்குக் கொடுத்துவிட்டோம். விதிமுறைகளில் தளர்வு தேவைப்படும் மாணவர்கள், கல்லூரி வளர்ச்சிக் குழுவை அணுகலாம்'' என்று தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்ற நீதிபதி தீட்சித், அடுத்த நாள் மீண்டும் விசாரிக்கப்படும்  என்று வழக்கை ஒத்திவைத்தார். அடுத்த நாள் விசாரித்தவர் ஜிஹாப் விவகாரம் தேசிய அளவிலான பேசுபொருளாக மாறியுள்ளதால், வழக்கைக் கூடுதல் அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார்.

Karnataka Hijab Row | வகுப்புக்குள் ஹிஜாப், காவித்துண்டு அணியக்கூடாது: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்..

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம், கர்நாடகாவில் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தேசிய அளவில் இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம்.  உரிய நேரத்தில் விசாரிப்போம் எனத் தெரிவித்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் கர்நாடக உயர் நீதிமன்றம் கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. எனினும் அனைத்து மாணவர்களும் காவித் துண்டுகள், ஷால்கள், ஹிஜாப் மற்றும் பிற மதச் சின்னங்களை வகுப்புக்குள் அணிந்து வருவதைத் தடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்துங்க - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்துங்க - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்Surmount Logistics Rewards | ஊழியர்களுக்கு பைக், கார் பரிசுகெத்து காட்டும் நிறுவனம்  அட நம்ம சென்னையில பா!Chennai Food Festival : ’’பீப் ஏன் இடம்பெறல?’’பொங்கி எழுந்த நீலம்! OFF செய்த அரசு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்துங்க - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்துங்க - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
Breaking News LIVE: திமுக அரசு மீது விசிக-வுக்கு எந்த அதிருப்தியும் இல்லை  - திருமாவளவன்
Breaking News LIVE: திமுக அரசு மீது விசிக-வுக்கு எந்த அதிருப்தியும் இல்லை - திருமாவளவன்
"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
Embed widget