உறைய வைக்கும் உறைபனி.. டெல்லியில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை.. நடுங்கும் மக்கள்!
வட மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் கடும் பனி நிலவி வருகிறது. குறிப்பாக டெல்லியில் குறைந்தப்டச வெப்பநிலை டெல்லி வானிலை ஆய்வு மையம் பதிவு செய்துள்ளது.
டெல்லியில் கடும் பனி நிலவி வருகிறது. வெப்பநிலை 2.2 டிகிரி செல்சியஸாக குறைந்ததன் காரணமாக கடும் உறைப்பனி நீட்டிக்கிறது. மேலும் அடர் பனி மூட்டத்தால் விமான போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Delhi | Severe cold wave and fog conditions continue to prevail in the national capital. Visuals from Akshardham pic.twitter.com/nxEqDnCmac
— ANI (@ANI) January 7, 2023
டெல்லி உள்பட வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகள் உறைய வைக்கும் பனியால் பாதிக்கப்பட்டுள்ளன. பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக குளிர் அலை வீச தொடங்கி இருப்பதால் அங்கு தட்பவெப்ப நிலை குறிப்பிட தகுந்த அளவில் குறைந்துள்ளது.
பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று கடும் குளிர் வீசியது. ஹரியானா, பஞ்சாப், சண்டிகர் மற்றும் ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம் காணப்பட்டது. டெல்லி, பஞ்சாப், சண்டிகர் மற்றும் ஹரியானாவின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 3 முதல் 7 டிகிரி செல்சியஸ் வரை பதிவானது.
டெல்லி - அயனங்கரில் உள்ள வானிலை நிலையம் நேற்று குறைந்தபட்சம் 1.8 டிகிரி செல்சியஸைப் பதிவு செய்ததன் மூலம் டெல்லியில் கடுமையான குளிர் அலை இருக்கும் என தெரிவித்தது. இன்று காலை 5.30 மணி நிலவரப்படி, பாலம் என்ற இடத்தில் வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது நேற்று 7 டிகிரி பதிவாகியிருந்தது.
அதேசமயம் தலைநகரின் அதிகாரப்பூர்வ வானிலை நிலையமான சஃப்தர்ஜங்கில் வெப்பநிலை 2.2 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை டெல்லி ரிட்ஜ் மற்றும் லோதி சாலையில் 1.5 டிகிரி செல்சியஸ் மற்றும் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. தென்மேற்கு டெல்லியில் உள்ள புற வட்டாரங்களில் ஒன்றான ஆயா நகரில் நேற்று காலை 1.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Update issued at 03:00 hours.#Fog #FogAlert #DelhiAirport pic.twitter.com/yt06fTNYA3
— Delhi Airport (@DelhiAirport) January 6, 2023
இந்திய வானிலை ஆய்வுத் மையம் 7ஆம் தேதி வரை குளிர் அலை இருக்கும் என ஏற்கனவே கூறியிருந்தது. இருப்பினும் இதே நிலைமை ஜனவரி 11 வரை தொடரக்கூடும் என கனித்துள்ளது. டெல்லி விமான நிலையம் கடும் பனி இருந்தாலும் தற்போது வரை விமான சேவை பாதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் எதிர் வரும் வாகனங்களை கூட பார்க்க முடியாத அளவு கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.