மேலும் அறிய
Advertisement
Headlines December 02: காலை 7 மணி தலைப்புச்செய்திகள்...!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- 34 பேரை பலி கொண்ட ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை குறித்து ஆளுநருடன் அமைச்சர் ரகுபதி சந்திப்பு - சட்ட மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வலியுறுத்தல்
- விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்ய 90,000 டன் யூரியா தமிழகம் வந்தது - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்
- ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்க்க உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு
- முன்னாள் அமைச்சர் சொத்துக்களை விற்ககூடும் என்பதால் தான் முடக்கினோம் என வருமானவரித்துறை உயர்நீதிமன்றத்தில் விளக்கம்.
- திமுக அரசைக் கண்டித்து இன்று, கோவையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் அதிமுக ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளது.
- எய்ட்ஸ் விழிப்புணர்வில் தமிழகம் முதலிடம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
- தமிழ்நாட்டில் முதல் முறையாக சர்வதேச புத்தகக் கண்காட்சி ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் 40 நாடுகள் பங்கேற்க உள்ளன.
- மின் திருத்த மசோதாவில் தமிழக அரசின் கொள்கைக்கு எதிரான 12 பிரிவுகளை நீக்க வேண்டும் : நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் திமுக வலியுறுத்தல்
இந்தியா:
- 89 தொகுதிகளீல் முதற்கட்ட தேர்தல்: குஜராத்தில் 60% வாக்குப்பதிவு
- காங்கிரஸ் தலைவர்களிடையே என்னை திட்டுவதில் போட்டி - பிரதமர் மோடி
- கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் டிசம்பர் 26-ம் தேதியை அரசு விடுமுறையாக அறிவித்து மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
- விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி கோபுரங்கள் அமைக்க தடை விதித்து மத்திய தொலைத்தொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
- இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், 33 வாக்குச்சாவடிகளை இளைஞர்கள் நடத்துகின்றனர் என்று தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.
- மும்பை- நாக்பூர் விரைவு சாலை: வருகிற 11ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
உலகம்:
- ஜி20 தலைமை பொறுப்பை ஏற்றது இந்தியா - தலைவர்கள் வாழ்த்து
- அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- நான் பயங்கரவாதி ஆக வேண்டும் என்பதே அப்பாவின் ஆசை - பின்லேடன் மகன் பேட்டி
- ஆப்கானிஸ்தான் பள்ளியில் குண்டுவெடிப்பு - உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்வு
விளையாட்டு:
- அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலப்பட்டியலில், அதிகளவில் ஆஸ்திரேலிய வீரர்களே முன்பதிவு செய்துள்ளனர்.
- இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்து உலகசாதனை படைத்துள்ளது.
- வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 598 ரன் சேர்த்து 'டிக்ளேர்' செய்துள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து தொடர்:
- ஸ்பெயினை வீழ்த்து 2வது சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான்.
- கோஸ்டாரிகாவை வீழ்த்தியது ஜெர்மனி அணி.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
விழுப்புரம்
தஞ்சாவூர்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion