மேலும் அறிய
Advertisement
Headlines Today: ஒரே நாளில் இத்தனை நிகழ்வுகளா? நொடிப்பொழுதில் அறிந்துக்கொள்ள.. 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ..!
Headlines Today: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- சட்டவிரோதமாக கனிமக் கொள்ளையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
- பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாட்டம் - சொந்த ஊருக்கு பொதுமக்கள் செல்ல 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
- அம்மா உணவகங்களை மூடும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் - வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாகும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தகவல்
- ஆரூத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி பணம் வாங்கியது கண்டுபிடிப்பு
- கடும் விலை உயர்வு - தக்காளியை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் எச்சரிக்கை
- காய்கறிகளை தமிழக அரசு மலிவு விலையில் விற்பனை செய்ய வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்
- அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கக்கோரிய வழக்கு - மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
- சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் ரூ.195 கோடி செலவில் புதிய மேம்பாலம் - அரசாணை வெளியீடு
- உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
- திருநெல்வேலி தொகுதி மக்களவை உறுப்பினர் சா. ஞானதிரவியம் மீது ஒழுங்கு நடவடிக்கை- விளக்கம் கேட்டு திமுக தலைமை நோட்டீஸ்
இந்தியா:
- மத்திய அரசின் உதவி பிரிவு அதிகாரிகள் 1,592 பேருக்கு பதவி உயர்வு - அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்
- தக்காளி விலை உயர்வு தற்காலிகமானது தான் என மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் ரோகித்குமார் சிங் தகவல்
- ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி
- டெல்லியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, காட்டு ராஜ்ஜியம் நடக்கிறது - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் விமர்சனம்
- நாடாளுமன்றத்துக்கு பிப்ரவரியில் தேர்தல் வந்து விடும் - மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கணிப்பு
- இந்தியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தேபாரத் ரெயில்கள் சேவை தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத்ஜோஷி தகவல்
- வன்முறையால் பற்றி எரியும் மணிப்பூருக்கு ஜூன் 29.30 ஆம் தேதி ராகுல்காந்தி பயணம்
- மாநிலங்களைவைக்கு புதியதாக 10 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜுலை 24ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு
உலகம்:
- பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தல்
- இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வழங்கும் சட்டத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் - லண்டனில் அண்ணாமலை பேச்சு
- அமெரிக்காவில் தீபாவளி பண்டிகையன்று பள்ளிகளுக்கு விடுமுறை - பொதுமக்கள் அறிவிப்பு
- சிலி நாட்டில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது கார் மோதிய விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
விளையாட்டு:
-
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்
- நடப்பாண்டு நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு
- டிஎன்பிஎல் கிரிக்கெட்: சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 79 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றி
- தெற்காசிய கால்பந்து தொடரில் இந்தியா-குவைத் அணிகள் மோதிய போட்டி 'டிரா'
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion