மேலும் அறிய
Advertisement
Headlines Today: மின்கட்டண உயர்வு.. பிரதமர் பயணம்.. மாறாத பெட்ரோல், டீசல் விலை...! இதோ 7 மணி தலைப்புச் செய்திகள்.!
Headlines Today: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பின் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி
- மத்திய அரசின் 20% மின்சார கட்டண உயர்வு அறிவிப்பு - தமிழக மின் நுகர்வோருக்கு பாதிப்பு இல்லை என மின் உற்பத்தி பகிர்மான கழகம் விளக்கம்
- மாநிலத்தில் வலுவான கட்சி தான் கூட்டணிக்கு தலைமை தாங்க வேண்டும் என்ற முதலமைச்சரின் கருத்துக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வரவேற்பு - கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும் என பாஜக மாநில தலைமைக்கு பதிலடி
- உயர்நீதிமன்ற நீதிபதிகளை சந்திக்கும்போது சால்வை, நினைவு பரிசு தரும் நடைமுறையை நிறுத்த வேண்டும் - பதிவுத்துறை வாயிலாக மட்டுமே உயர்ந்திமன்ற நீதிபதிகளை தொடர்பு கொள்ள வேண்டும் என கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவுறுத்தல்
- பிரசவ அறுவை சிகிச்சையின்போது, கர்பப்பையை குடலுடன் சேர்த்து தைத்த மருத்துவர்கள் - கடலூரில் அதிர்ச்சி சம்பவம்
- சென்னையில் வெள்ள பாதிப்புகளை தடுக்க கொசஸ்தலை மற்றும் ஆரணி ஆறுகளை இணைக்க திட்டம்
- மாநில பறவைகள் ஆணையம் அமைத்தது தமிழக அரசு - பறவைகள் பாதுகாப்பு முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஆணையம் அமைத்து உறுப்பினர்கள் நியமனம்
இந்தியா:
- அமெரிக்காவை தொடர்ந்து இரண்டு நாள் சுற்றுப்பயணமாக எகிப்து சென்றடைந்தார் பிரதமர் மோடி - இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு
- இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு, எரிசக்தி பாதுகாப்பு குறித்து எகிப்து தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் பிரதமர் மோடி
- அனைத்துக்கட்சி குழு மணிப்பூர் செல்ல அனுமதிக்க வேண்டும் - உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை
- தமிழ்நாட்டிற்கு அரிசி வழங்க மத்திய அரசு மறுப்பு - தேவைப்பட்டால் வெளிச்சந்தையில் வாங்கிக் கொள்ள வலியுறுத்தல்
- உத்தரபிரதேசத்தில் புதுமண தம்பதி உட்பட 5 பேர் வெட்டிக்கொலை - கொலையாளியும் தனக்கு தானே சுட்டு பலி
- வெப்பச்சலனம் எதிரொலி - பாட்னாவில் ஜுன் 28ம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவு
உலகம்:
- பெலாரஸ் செல்கிறார் வாக்னர் படை தலைவர் - வழக்கை முடிக்கும் ரஷ்யா - தணியும் ஆயுத கிளர்ச்சி பதற்றம்
- ரஷ்ய தலைநகர் மாச்கோவில் ஜுலை 1ம் தேதி வரை பொது இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு
- தென்னாப்பிரிக்காவில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 31 பேர் பலி
- அமெரிக்காவில் விளையாட்டாக துப்பாக்கியை எடுத்து டிரிக்கரை அழுத்திய குழந்தை - குண்டு பாய்ந்து பலியான கருவுற்று இருந்த தாய்
- கம்போடியாவில் வாக்களிக்காத அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட தடை
விளையாட்டு:
- உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று போட்டி - ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகள் வெற்றி
- ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை 27ம் தேதி வெளியாகும் - ஐசிசி அறிவிப்பு
- தெற்காசிய கால்பந்து போட்டி - இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி
- டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் - நெல்லை மற்றும் மதுர அணிகள் வெற்றி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion