மேலும் அறிய
Advertisement
Today Headlines: உள்ளூர் தொடங்கி உலகம் வரையிலான முக்கிய நிகழ்வுகளை அறிய.! காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ..!
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- மதுரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - மூன்றரை லட்சம் புத்தகங்களுடன் மிளிரும் அறிவின் பிரமாண்டம்
- அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு - அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை செல்லும் என உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி தீர்ப்பு
- கோடநாடு விவகாரத்தில் உண்மையை அறிய மக்கள் விரும்புகிறார்கள் - முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கருத்து
- பொது சிவில் சட்டத்திற்கு எதிராக செயல்படுவோம் - திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்
- அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வழங்க 1.68 கோடி சேலை, 1.63 கோடி வேட்டி உற்பத்தி - தமிழக அரசு உத்தரவு
- சென்னையில் பேசின் பிரிட்ஜ் பணிமனையில் இருந்து செண்டிரல் ரயில் நிலையம் வந்த வந்தே பாரத் ரயில் மிது கல்வீச்சு - கண்ணாடிகளை உடைத்த மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
- காமராஜர் பிறந்தநாளையொட்டி தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று முதல் இரவு நேர பாடசாலை தொடக்கம்
இந்தியா:
- பொது சிவில் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க கால அவகாசத்தை நீட்டித்தது மத்திய சட்ட ஆணையம்- கூடுதலாக இரண்டு வாரங்கள் அவகாசம்
- வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 3 விண்கலம் - பூமியிலிருந்து ஏவப்பட்ட 16வது நிமிடத்தில் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது
- சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ ஆராய்ச்சியாளர்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து
- பாஜக வெளியிட்ட வீடியோவில் இந்திய பகுதிகளை பாகிஸ்தான், சீனா பகுதிகளை சித்தரிப்பதா? - காங்கிரஸ் கடும் கண்டனம்
- மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு தேதி தொடங்கும் தேதி அறிவிப்பு - முதற்கட்டமாக ஜுலை 27,28ம் தேதிகளில் ஆன்லைனில் தொடக்கம்
- யமுனை ஆற்றில் நீர்மட்டம் குறைந்தபோதும் தலைநகரில் வடியாத வெள்ளம் - அரசு அலுவலகங்கள் நிறைந்த பகுதிகளையும் நீர் ஆக்கிரமித்தது
- மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகருக்கு நோட்டீஸ் - உச்சநீதிமன்றம் அதிரடி
உலகம்:
- பிரான்ஸ் தேசிய தின நிகழ்ச்சியில் பார்வையாளர்களை கவர்ந்த ரஃபேல் விமானங்களின் சாகசம் - தீவிரவாதத்தை ஒழிக்க பிரான்சுடன் இணைந்து செயல்பட முடிவு என பிரதமர் மோடி அறிவிப்பு
- பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டார் பிரதமர் மோடி
- நடப்பாண்டில் இதுவரை 289 குழந்தைகள் பலி - மத்திய தரைக்கடல் பகுதியில் தொடரும் சோகம்
- இணையத்தில் உருவாக்கிய அனைத்தையும் திருடுகிறது - கூகுள் நிறுவனத்திற்கு எதிராக 8 பேர் வழக்கு
- தான்சானியாவில் லாரி மீது மினி பேருந்து மோதி 6 பேர் பலி
விளையாட்டு:
- மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
- ஆசிய விளையாட்டுக்குச் செல்லும் இந்திய கிரிக்கெட் அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமனம்
- விம்பிள்டன் டென்னிஸ் - மெத்வதேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அல்காரஸ் - ஜோகோவிச் உடன் பலப்பரீட்சை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
ஆட்டோ
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion