மேலும் அறிய
Advertisement
Today Headlines: 24 மணி நேரத்தின் மொத்த நிகழ்களை அறிய.! காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ..!
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- பொது சிவில் சட்டம் சரிபட்டு வராது - காரணங்களை பட்டியலிட்டு மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
- மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
- விலைவாசி உயர்வை கண்டித்து ஜுலை 20ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்பாட்டம் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
- பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஜுலை 22ம் தேதி தொடங்கும் - நடப்பாண்டு இரண்டு புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
- தென்காசி தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை - காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி என அறிவிப்பு
- மகளிர் உரிமைத் தொகை திட்டம் - விண்ணப்பம் பெற 24ம் தேதி முதல் சிறப்பு முகாம் என சென்னை மேயர் பிரியா அறிவிப்பு
- குடிமகன்களின் வசதிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தும் தமிழக அரசு மதுவிலக்கு குறித்து வாக்கெடுப்பு நடத்த தயாரா? - பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி
இந்தியா:
- இரண்டு நாள் அரசு பயணமாக பிரான்சு சென்றடைந்த பிரதமர் மோடி - அந்நாட்டின் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானரை வழங்கி கவுரவித்தார் அதிபர் இமானுவேல் மேக்ரான்
- உலகின் பழமையான மொழி ஒரு இந்திய மொழி என்பத விட வேறென்ன பெருமை இருக்க முடியும் - பாரிசீல் இந்திய வம்சாவளியினரிடையே பேசும்போது பிரதமர் மோடி தமிழ் குறித்து பெருமிதம்
- இன்று பிற்பகலில் விண்ணில் சீறிப்பாய உள்ளது சந்திரயான் 3 - நிலவில் கால் பதிக்கும் 4வது நாடு என்ற சாதனையை படைக்க தயாராகும் இந்தியா
- டெல்லியில் மழை ஓய்ந்தும் யமுனை ஆற்றில் அபாய அளவை தாண்டி பாயும் வெள்ளம் - நீர் சூழ்ந்ததால் குளம் போல மாறிய சாலைகள், குடியிருப்புகள்
- இமாச்சலில் வெள்ளம் வடிந்தும் இயல்பு நிலை திரும்பாததால் மக்கள் அவதி - உணவு, தண்ணீரின்றி தவிக்கும் மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் விநியோகம்
- கடன் செயலி முகவர்களின் அராஜகம் - தொல்லை தாங்கமால் பெங்களூரு கல்லூரி மாணவன் தற்கொலை
உலகம்:
- ஊதிய உயர்வு கேட்டு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் - இங்கிலாந்தில் மருத்துவ சேவை பாதிக்கும் அபாயம்
- நேட்டோ உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபரின் பெயருக்கு பதிலாக ரஷ்ய அதிபரின் பெயர் உச்சரிப்பு - அமெரிக்க அதிபர் பைடனின் வீடியோ வைரல்
- பிரான்சிடம் இருந்து மேலும் 26 ரஃபேல் விமானங்களை வாங்க இந்தியா முடிவு - இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல்
- பாகிஸ்தானுக்கு ரூ.24 ஆயிரம் கோடி கடன் உதவி - சர்வதேச நாணய நிதியம் முடிவு
- கூகுள், ஓபன் ஏஐ-க்கு போட்டியாக எக்ஸ்ஏஐ எனும் தனது, சொந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை தொடங்கினார் எலான் மஸ்க்
விளையாட்டு:
- மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி, இரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 162 ரன்கள் முன்னிலை
- ஆடவர் மற்றும் மகளிர் அணிக்கு ஒரே மாதிரியான பரிசு வழங்க சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் முடிவு
- விம்பிள்டன் டென்னிஸ் - அரையிறுதியில் போபண்ணா, மேத்யூ எப்டென் ஜோடி தோல்வி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion