மேலும் அறிய
Advertisement
7AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் உங்களைச் சுற்றி நடந்தது இதுதான்..! காலை 7 மணி தலைப்புச் செய்திகள்!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- தமிழைக் காக்கவும் தமிழ் நாட்டைக் காக்கவும் கலைகளை பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கலைஞர்களுக்கு அறிவுரை.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் ட்போட்டியிடுகிறது. திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து பேசிய பிறகு காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி பேட்டி.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் யார் போட்டியிடுவது என்பது குறித்து தமாகா தலைவர் ஜி.கே. வாசனுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திப்பு
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் யார் போட்டியிடுவது என்பது குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் பேட்டி
-
ஆளுநர் குறித்து அவதூறு பேச்சுக்கு திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
முதலமைச்சரின் தனி செயலாளராகவுள்ள உதயச்சந்திரன், உமாநாத் மற்றும் சண்முகம் ஆகிய 3 பேருக்கு கூடுதலாக பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
-
வருவாய் துறையில் என்ன முறைகேடு நடந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்’ - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன்
- ஈரோடு கிழக்கு தொகுதியை அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு ஒதுக்க வேண்டும் என்று ஈரோட்டில் நடைபெற்ற தமாகா நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- தமிழக ஆளுநரை கண்டித்து கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- தமிழகத்தில் வரும் 22 மற்றும் 23ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா:
- மத்திய அரசு பணிகளில் 71 ஆயிரம் பேருக்கு இன்று பணி நியமன ஆணை; பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்குகிறார்.
- குஜராத் கலவரம், பிரதமர் மோடி தொடர்பாக பிரிட்டனில் ஒளிபரப்பப்பட்ட ஆவணப்படத்துக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
-
நீட் விலக்கு மசோதா தொடர்பாக மறு விளக்கம் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
-
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 12ஆம் தேதி வரை கோயிலின் வருவாய் சுமார் ரூ.310.40 கோடியாக இருந்தது.
உலகம்
-
அமெரிக்காவின் ஓக்லாண்ட் நகர கவுன்சிலில் இந்திய வம்சாவளி LGBTQ பெண் தேர்வு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion