மேலும் அறிய
Advertisement
6 PM Headlines: உலகம் - உள்ளூர் செய்திகள் வரை ஒரு நொடியில் உங்கள் முன்னால்.. மாலை 6 மணி தலைப்பு செய்திகள்!
Headlines 6 PM: இன்று காலை முதல் மாலை மணிவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு வெளியே ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு வரை குவாரிகள் இயங்க அனுமதி மறுக்கப்பட வேண்டும் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- அடுத்த 3 மணிநேரத்திற்கு தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- கரூரில் 6 முதல் 18 வயதுடைய இடை நின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்
- 2023ஆம் ஆண்டு மார்ச்/ ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்குத் தனித்தேர்வர்கள் டிசம்பர் 26 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
- எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
- "ஓபிஎஸ் தலைமையிலான கூட்டத்தை கட்சி கூட்டமாக பார்க்க முடியாது" என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
- தெற்கு ரயில்வேயின் 964 பணிகளில் 80 சதவீத வட இந்தியர்களுக்குத் தாரை வார்ப்பதா என்று கேள்வி எழுப்பியுள்ள அன்புமணி, 100% மாநில ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
- தமிழகத்தில் பெரும்பாலான கூட்டுறவு வங்கிகள் லாபகரமாக இயங்கி வருவதாக, அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
- மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்தியா:
- சீனாவை அச்சுறுத்தி வரும் உருமாறிய கொரோனா வகையான ஒமிக்ரான் BF.7 பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.
- கத்தார் உலகக்கோப்பை கால்பந்து இறுதிபோட்டி அன்று கேரளாவில் 50 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- நாட்டில் 60 நாட்களில் 1.6 லட்சம் கிலோ சட்டவிரோத போதை பொருட்கள் அழிக்கப்பட்டு உள்ளன என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.
- படுக்கை வசதியுடன் கூடிய 200 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்க இந்திய ரயில்வே திட்டமிடப்பட்டுள்ளது.
- ஒடிசாவில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு
உலகம்:
- ஐரோப்பாவில் இருந்து ஏவப்பட்ட வேகா-சி ராக்கெட் தோல்வியடைந்ததாக ஏரியன் ஸ்பேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது
- ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- முட்டாள்தனமான நபர்கள் கிடைத்தால் ட்விட்டர் சிஇஓ பதவியிலிருந்து விலகுவேன் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
- உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 63.22 கோடியாக உயர்வு
- ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க தாலிபான்கள் விதித்துள்ள இடைக்கால தடைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
விளையாட்டு:
- வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இருந்து நவ்தீப் சைனி விலகல்.
- ஒரு வீரர் நாட்டுக்காக விளையாடும்போது அழுத்ததை உணர்ந்தால், நீங்கள் விளையாடுவதை நிறுத்தி கொள்ளுங்கள் என்று கபில்தேவ் தெரிவித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
- சர்வதேச பெண்கள் டி20 தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்ட பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 3வது இடத்தில் உள்ளார்.
- ரிக்கி பாண்டிங்கை விட தோனியே மிகச் சிறந்த கேப்டன் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
மதுரை
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion