மேலும் அறிய
Advertisement
Headlines Today, 27 Aug: காபூல் இரட்டை குண்டுவெடிப்பு.. உள்வாங்கிய கடல்... பயிர் கடன் தள்ளுபடி... இன்னும் பல!
இன்றைய தினத்தின் சில முக்கியச் செய்திகள்..
- காபூல் விமான நிலையத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 60 பேர் உயிரிழப்பு - 140 பேர் படுகாயம் என தகவல் - ஐஎஸ் அமைப்புபொறுப்பேற்பு
- காபூல் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 13 பேர் பலி
- குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் இருந்து ஒருநாள் முன்னதாக இந்தியா கிளம்பிய 140 வம்சாவளி இந்தியர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்
- கொடைக்கானல் அருகே பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு - மரப்பாலம் உடைந்ததால் கயிறு கட்டி ஆற்றைக்கடந்த மக்கள்
- சென்னையில் சில திரையரங்குகள் இன்று திறப்பு - படிப்படியாக மற்ற திரையரங்குகளை திறக்க நடவடிக்கை
- ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்கும், கடைகளுக்கும் அபராதம் - தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை
- புதுச்சேரி - கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்கள் தள்ளுபடி - சட்டப்பேரவையில் முதலமைச்சரும், நிதியமைச்சருமான ரங்கசாமி அறிவிப்பு
- இளநிலை தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணாக்கர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
- ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் அரசுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின்
- சென்னை விமான நிலையத்தில் இருந்து 9 கிலோ தங்கம் குப்பையில் வைத்து கடத்தல் - தங்கத்தை அபகரிக்க வழிப்பறி நாடகம் ஆடிய 3 பேர் கைது
- தமிழகத்தில் ஒரே நாளில் 1559 பேருக்கு கொரோனா - நேற்று ஒரே நாளில் 26 பேர் உயிரிழப்பு
- தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 5.73 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன
- சென்னையில் நேற்று சிறப்பு முகாம்கள் மூலம் ஒரே நாளில் 1லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது
- காஞ்சிபுரம் - திருப்பத்தூர் மாவட்டங்களில் பரவலாக மழை
- ஆந்திராவில் 2கிமீ தூரத்திற்கு உள்வாங்கிய கடல் - மீனவ கிராமத்து மக்கள் அச்சம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion