Headlines Today: கனமழையால் மிதக்கும் கன்னியாகுமரி.. டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி - சில முக்கியச் செய்திகள்!
இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் சில..
இந்தியா:
கிரிப்டோகரன்சி முதலீடு - அதிகப்படியான வாக்குறுதியால் இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் - பிரதமர் மோடி
இன்று தென்மண்டல கவுன்சில் கூட்டம் - மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் திருப்பதியில் நடைபெறுகிறது
மணிப்பூரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 7 பேர் உயிரிழப்பு
மகாராஷ்டிராவில் 26 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை - 3 காவலர்கள் காயம்
தமிழகம்:
வெளுத்து வாங்கும் மழையால் வெள்ள நீரில் தத்தளிக்கும் கன்னியாகுமரி - சாலைகளில் வெள்ளம் - பொதுமக்கள் கடும் அவதி
தொடர் கனமழை காரணமாக கன்னியாகுமரியில் பல்வேறு இடங்களில் இடிந்த வீடுகள் - நிவாரண உதவிக்காக மக்கள் காத்திருப்பு
அந்தமான் அருகே உருவானது புதிய காற்றழுத்த பகுதி - கன்னியாகுமரியில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது - 24000 கன அடி நீர் வெளியேற்றம்
கனமழை காரணமாக குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு
அதிமுக ஆட்சியில் தூர்வாருவதில் நடந்த முறைகேடு - குழு அமைத்து விசாரிக்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்
கோவை பள்ளி மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு தொடரும் போராட்டம் - பள்ளி முதல்வர் மீதும் வழக்கு
கோவை மாணவியின் மரணம் மனதை வருத்தச் செய்கிறது - குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவோம் - முக ஸ்டாலின்
கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!
— M.K.Stalin (@mkstalin) November 13, 2021
இன்று தமிழகம் முழுவதும் இன்று கொரோனா மெகா முகாம் - 50000 இடங்களில் முகாம்
கிரிக்கெட்:
டி20 உலகக் கோப்பை யாருக்கு - ஆஸி - நியூசிலாந்து இன்று மோதல்
உலகம்:
ஈக்வடார் நாட்டில் சிறையில் பயங்கர மோதல் - 58 கைதிகள் கொலை
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்